Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts

Saturday, September 29, 2012

பரவும் நோய்களுக்கு தீர்வு என்ன? என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி?......


 அதிரையில் தற்பொழுது பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரிலிருந்து உண்டாகும் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் நமதூரில் பல நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்கள் மற்றும் வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள  வேண்டும். இந்நிலையில் நமதூரை சேர்ந்த ஒரு பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எவ்வாறு இந்த காய்ச்சல் வந்திருக்க கூடும் கொசுக்களால் தானே. எனவே பேரூராட்சி தினமும் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமதூரில் நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் விரைவில் இது பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் வேண்டும். இதை அதிரை பேரூராட்சி செய்யுமா?...
பொறுத்து இருந்து பார்ப்போம்......     

Thursday, April 26, 2012

அதிரை சின்ன சிங்கபூரா?... சின்னாபின்னமான சிங்கபூரா ?

அதிரையை  சின்ன சிங்கபூராக மாற்றுவேன் என்று தனது பதவி ஏற்பு மேடையில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் வாக்குறிதி அளித்தார்கள். அதன்படி அதிரை நகரில் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலமும் ப்ளெக்ஸ் மூலமும் விழிப்புணர்வு கொடுத்தார். இதன் முலம் அதிரையில் பிளாஸ்டிக் பைகளின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளது. மேலும் சுகாதாரத்தை சீர்படுத்த பணிகள் செய்தாலும் அதிரை சுகதரத்தில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

அதிரை ஆஸ்பத்திரித் தெருவில் திமுகவை சேர்ந்த மெம்பர் செயத் வீட்டின் எதிரே உள்ள ஒரு கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடை பல நாட்களாக நிரம்பி தெருவில் ஓடிகொண்டிருக்கிறது. இதற்கும் மேம்பரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் போலும். தன் வீடு எதிரே சுகாதார சீர்கேட்டை கண்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் போலும். இதனால் மக்கள் தெருக்களில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. பள்ளிக்கு தொழுக செல்லும் வழியில் வாகனங்கள் செல்லும் பொது அசுத்த நீர் ஆடைகளில் தெரிரிக்கிறது. இதன் மூலம் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இன்று காலை அதே தெருவில் உள்ள மற்றொரு சாக்கடையும் நிரம்பி ஓடுகிறது. இன்னும் சிறுது நேரத்தில் இரண்டு நதிகளும்(சாக்கடைகளும்)  சேர்ந்து தெருவிற்கு நறுமணமும் பல நோய்களும் வழங்க உள்ளது.

இச்சீர்கேட்டை என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி. தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடியாததற்கு அவர்கள் கட்சி உறுப்பினர்களே தடையாய் உள்ளனரே.  அதிரை பேரூராட்சி என்ன செய்ய போகிறது. அதிரைக்கு என்ன பெயர் வாங்கி தர போகிறது. சின்ன சிங்கபூரா? அல்லது சின்னாபின்னமான சிங்க பூரா?.......   

தேங்கி நிற்கும் சாக்கடை நீர் 

நிரம்பி வழியும் சாக்கடை 




புதுப்பள்ளிக்கு செல்லும் வழி




  நிரம்பி வழியும் மற்றொரு சாக்கடை 

படங்கள் : ஹசன் (முஸ்லிம்மலர்) 

Sunday, April 8, 2012

ராமஜெயம் கொலை செய்யப்பட்டது அதிகாலை 2.50 மணிக்கா?

திருச்சி: ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நேரம் குறித்து போலீஸாருக்குப் புதுத் தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொலையான ராமஜெயத்தின் கையில் கட்டியிருந்த கடிகாரம் அதிகாலை 2.50 மணி என்று காட்டியவண்ணம் இருக்கிறது. அதற்கு மேல் கடிகாரம் ஓடவில்லை. எனவே அந்த நேரத்தில்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராமஜெயம் கொலையைப் போல ஒரு பெரும் குழப்பத்தை தமிழக போலீஸார் சந்தித்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தக் கொலை வழக்கில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தகவல் கிடைத்தபடி இருப்பதால் போலீஸாரே பெரும் குழப்பத்தில் உள்ளனர். கொலையைச் செய்தவர்கள் போலீஸாரைத் திசை திருப்பும் வகையில் படு கில்லாடித்தனமாக பலவற்றை செய்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் பல திசைகளிலும் தங்களது விசாரணைப் பார்வையை போலீஸார் விரட்டி விட்டு வருகின்றனர். முதலில் காலை 5 மணியளவில் வாக்கிங் போனபோது ராமஜெயம் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. சில நாட்கள் கழித்து அவர் இரவிலேயே ஒரு வீட்டில் வைத்து சிலரால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் ராமஜெயம் காலை 5 மணிக்கு மேல் வாக்கிங் போனார் என்றும் அதன் பிறகுதான் அவரைக் காணவில்லை என்றும் அவரது மனைவி போலீஸில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது போலீஸாருக்குக் கிடைத்துள்ள புதுத் தகவல் அவர்களை குழப்பமடையச் செய்வதாக உள்ளது. அதாவது ராமஜெயம் கட்டியிருந்த கைக்கடிகாரம் 2.50 மணியோடு நின்றுள்ளது. அதற்குப் பிறகு அது ஓடவில்லை. அவரை தாக்கி அடித்தபோது அதிர்ச்சியில் கடிகாரம் நின்று விட்டது.

எனவே அந்த 2.50 மணியளவில்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே இந்த ஓடாத கைக்கடிகாரம் தற்போது ஒரு முக்கிய சாட்சியாக மாறியுள்ளது.

அதிகாலையில் ராமஜெயம் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அதிகாலை 2.50 மணிக்கு யாரும் வாக்கிங் போக வாய்ப்பில்லை என்பதால் அந்தநேரத்தில் ராமஜெயம் எங்கிருந்தார், அவர் சென்ற இடம் எது, ஏன் அங்கு போனார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

AFCC அதிரை அணி சாம்பியன்

நேற்று இரவு சரியாக 8  மணிக்கு அதிரை கிராணி  மைதானமே மின்னொளியில் ஜொலித்தது. விண்ணை பிளந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தன. ஆம் அதிரை வரலாற்றிலயே முதல் முறையாக மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியை அதிரை AFCC அணி நடத்தியது. முதல் போட்டியை சொந்த அணிகளான AFCC A vs AFCC B அணிகள் காட்சி  போட்டியாக விளையாடின. இதை தொடர்ந்து சுமார் 70 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இரவு முழுவதும் தொடர்ந்து  நடைபெற்றது. பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். இதில் இறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது. AFCC vs VCC  வேதாரண்யம் அணிகள் மோதின. இதில் அதிரை அணியான AFCC  சாம்பியன்  ஆனது. இதன் முலம் முதல் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியில் சொந்த அணியே சாம்பியன் ஆனது பெருமைக்குரியது. மேலும் புகைப்படங்கள் மற்றும் காணொளி விரைவில்....      

Sunday, November 6, 2011

அதிரை பேருந்து நிலையத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்தனர்...

அதிரை பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணிரை பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் காட்சி



















Sunday, October 16, 2011

அதிரையில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை ....

அதிரை பேரூராட்சியின் புதிய தலைவரின்  வாக்குறுதிப்படி சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி இன்று காலை நமதூர் 12 வது வார்டில் சாக்கடை சுத்திகரிப்பு தெருவோரத்தில் தேவை இல்லாமல் வளர்ந்திருந்த செடிகள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  நீண்ட நாட்களுக்கு பிறகு சாக்கடையை சுத்திகரித்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இதன் மூலம் பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதி நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. அதன் புகைப்படம் மற்றும் காணொளி உங்கள் பார்வைக்காக....





    



Tuesday, September 6, 2011

ரியாதிலுள்ள அதிரை வாசிகளின் சந்திப்பு....

அஸ்ஸலாமு அலைக்கும்,

நோன்பு பெருநாள் முடிந்து முதல் ஜூம்மாவான வெள்ளிக்கிழமை அன்று  சவுதி அரேபியா தலைநகரமான ரியாதிலுள்ள அதிரை வாசிகள் அனைவரும் நஸ்ரியாவில் உள்ள அமீர் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு அனைவரும் கூடிநின்று ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் முஸாபஹா,முழாகத் செய்து தன்னுடைய பெருநாள் வாழ்த்துக்களையும் இன்னும் அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்காக.









இப்படிக்கு

ஹாபில்.நெய்னா முஹம்மத் @ ரியாத்
 
அறிவிப்பு: இது  போன்று நீங்கள் ஏதானும் புகைப்படங்கள் வைத்திருந்தால் mailto:muslimmalar@gmail.com  என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள். முஸ்லிம்மலரில் பதியப்படும்.

Thursday, August 18, 2011

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த வாசகர்களே கடந்தே இரண்டு மாதங்களாக முஸ்லிம்மலரில் எந்த செய்தியும் வெளியிட வில்லை. நன் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய மேற்படிப்பிற்காக வெளியூரில் தங்கி படித்து வருகிறேன். ஊரின் தொடர்பு இல்லாததால் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம். இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்மலர் புத்துணர்ச்சியுடன் இயங்க முயற்சி செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முஸ்லிம்மலரில் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வோம். தற்பொழுது அதிரை BBC என்ற இணையத்தளம் அதிரையின் முக்கிய நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்து வருகிறது. இது ரமலான் மதம் என்பதால் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு பயான் நேரடியாக காணலாம்.இன்னும் பல அறிய செய்திகளை வழங்கிவரும் அதிரை BBC என்ற இனைய தளத்தை காணுங்கள். விரைவில் முஸ்லிம்மலரில் செய்திகளை காணலாம். வஸ்ஸலாம்  

Saturday, May 28, 2011

திருக்குர்ஆன் மாநாடு- மூதல் நாள் துளிகள்....

அதிரை பைத்துல்மால் நடத்தும் 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு அதிரை புது பள்ளிவளாகத்தில் 27,28,29-05-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதன் தொடக்க நாளன நேற்று மாநாட்டு திடலில் நடந்த விஷயங்கள்...
மௌலவி.அப்துல் ஹமீது பாஜில் பாகவி அவர்கள்
மௌலவி அபுதாகிர் பாஜில் பாகவி அவர்கள். 
மழை பெய்ததால் லேப்டாப் நனையாமல் இருக்க குடையால் மூடிருக்கும் காட்சி. 
காலை : 
நேரம்:9 மணி 
  • காலையில் சிறுவர்களின் கிராத் போட்டியுடன் மாநாடு துவங்கியது.
  • போட்டியில் மாணவ,மனைவியர்,சிறிய குழந்தைகள் பங்கு பெற்று தங்களது குரல் வளத்தை வெளிபடுத்தினார்கள்.
  • பகல் 12 மணிவரை நடந்த போட்டியில் பல மாணவ,மனைவியர்,குழந்தைகள் பங்கு பெற்று திருக்குர்ஆணை அழகிய முறையில் ஓதினார்கள்.
  • சிறிய குழந்தைகள் அழகிய முறையில் ஓதியது. கேட்போரை மெய்சிலிர்க்க வைத்தது.  

மாலை:
நேரம்:4 மணி 
  • 4 மணிக்கு மாநாட்டு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் கூடம் அலைமோதியது.
  • குறிப்பாக பெண்கள்  பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
  • மக்ரிப் தொழுகைக்கு பின் வண்டிபேட்டை இமாம் நூர் அவர்கள் கிராத் ஓத...
  • அப்துல்காதர் சார் தொகுத்து வழங்க.வக்கீல் முனைப் வரேவேற்புரை வாசித்தார்.
  • அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
  • புதுப்பள்ளி இமாம் யூசுப் ஆலிம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
  • அப்துல் காதர் ஆலிம் அவர்கள் சில மணித்துளிகள் தலைமை உரையாற்றினார்கள்.
  • பின் சிறப்பு விருத்தினர் மௌலவி.அப்துல் ஹமீது பாஜில் பாகவி அவர்கள் இறைமறை கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
  • ஐநா சபை போடுகின்ற சட்டத்தை மட்டும் ஏற்கும் நாம் குர்ஆண் கூறும் சட்டத்தை ஏன் ஏற்பதில்லை என்பது பற்றியும் குர்ஆண் கூறும் சட்டத்திற்கும் மனிதன் விதிக்கும் சட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை அடுக்கினார். இவர் உரையாற்றும்போது மாநாட்டு  திடலே அமைதியாக இவரின் பேச்சில் மயங்கியது.
  • இவருக்கு அடுத்த படியாக மௌலவி.அபுதாகிர் பாஜில் பாகவி அவர்கள் இறைமறை போற்றும் இல்லறவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
  • கிரிக்கெட்டில் 20-20 ஓவர் போல ஆண்களுக்கும் பெண்களுக்கும் 10-10 சட்டத்தை கூறினார்.
  • இவருடைய நகைச்சுவை கலந்த பேச்சால் மாநாட்டு திடலே சிரிப்பு  வெள்ளத்தில் மூழ்கியது.
  • இவரின் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் வெளியில் வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்தது.
  • மழை பெய்தால் பேயட்டும் நாங்கள் நகர மாட்டோம் என்பது போல வந்தவர்கள் ஆசயாமல் நின்று மாநாடு தொடர்ந்தது.
  • இறுதியாக எப்பொழுதும் திருக்குர்ஆண் மாநாட்டில் உரையாற்றும் S.K.M ஹாஜா முஹைதீன் காசிபி அவர்கள் இறைமறை கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
  • தமக்கு இல்லாவிட்டாலும் அடுத்தவனுக்கு கொடுகின்ற பண்பை வளர்த்த ரசூல் (ஸல்) அவர்களின் உம்மத்தின் இன்றைய நிலை பற்றி வருந்தினார்.
  • இறுதியாக காலையில் நடந்த கிராத் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இறுதியாக கப்பார ஓதி முதல் நாள் நிகழ்சிகள் நிறைவு பெற்றனர்.
  • வெளிநாட்டு வாழ் அதிரை மக்கள் காண்பதற்காக முஸ்லிம்மலர்,அதிரை xpress ஆகிய இனைய தளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யபட்டது.
இரண்டாம் நிகழ்ச்சிகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிரை மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இன்றும் முஸ்லிம்மலர்,அதிரை xpress இணையதளங்களில் நேரடி ஒளிப்பரப்பை காணலாம்.வெளிநாட்டு வாழ் அதிரை மக்கள் நமதூரில் நடக்கும் மானத்தை நேரடியாக கண்டு களிக்குமாறு முஸ்லிம்மலர் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
தகவல்: முஸ்லிம்மலர் ஹசன்.  
           

Saturday, April 30, 2011

சீறி எழுந்த மக்கள் திணறியது அதிரை........

நமதூரிளிருந்து பட்டுகோட்டை சென்ற பேருந்து நிறுத்தி வைக்க பட்டுள்ளது . அருகில் நமதூர் இளைஞர்கள். 
  

காவல்துறை ஆய்வாளரிடம் வேண்டுகோள் விடுத்த பொது திரளாக நின்ற மக்கள்   

பட்டுகோட்டையிலிருந்து அதிரை வந்த பேருந்து சாலை ஓரம் நின்ற காட்சி....



அதிரையில் நேற்று காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. பொது மக்கள் வழக்கம் போல் தடை செய்வது தான் என்று விட்டு விட்டார்கள். ஜும்மா முடிந்தும் வரவில்லை மின்சார வாரியத்திற்கு போன் செய்து கேட்டபொழுது 5 மணிக்கு வந்து விடும் என்று பதிலளித்து விட்டு போனை கிலே எடுத்து வைத்து விட்டனர். பொறுமையாக  இருந்த நமதூர் மக்கள். இஷா தொழுது முடித்ததும் வாராததால் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அதிரை-பட்டுகோட்டை சாலை முடக்கப்பட்டது. போலிசார் பேச்சுவார்த்தைக்கு பலன் கிடைக்காததால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தாசில்தாரின் சமாதான பேச்சு வார்த்தையால் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து இரவு 12.45 க்கு மின்சாரம் வந்தது. எனினும் இடையே தடைபட்டு வந்தது. ஒரு வழியாக காலை 7 மணியளவில் இருந்து இது வரை மின் தடையில்லாமல் இருக்கிறது. மின்சார வாரியத்தின் அசாதாரண போக்கால் நேற்று அதிரையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. இது போன்று இனி நடக்காது என்று அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அதை இனியாவது அதிரை மின்சார வாரியம் காப்பற்றுமா? அதிரை சமுக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.......             

Monday, April 25, 2011

அதிரையில் பேருந்து விபத்து வீடியோ:....

21.04.2011அன்று காலை 11.30 மனி அளவில் பட்டுக்கேட்டையில் இருந்து அதிரையை நோக்கி வந்து கொன்டு இருந்த பேருந்து நமதூர் வெள்ள குழம் அருகில் வந்த பெழுது பக்கத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது.. அதன் வீடியோ: 

Sunday, April 24, 2011

பிரியா விடை......

 அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்த திரு.சீனிவாசன் சார் அவர்களும், திரு.அஹ்மத் தம்பி சார். இருவரும் கடந்த 20ஆம் தேதி ஒய்வு பெற்றனர்.அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.....  


புகைப்பட உதவி :அபு ஹம்னா(தீனியாத் ஆசிரியர்) 
இவர்களின் சாதனை விபரங்கள் விரைவில் காணலாம்....

Thursday, April 14, 2011

அதிரையில் அமைதியான முறையில் வாக்குபதிவு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்குபதிவு நேற்று காலை 8 மணி முதல் 5 மணிவரை நடைபெற்றது. அதிரையை பொறுத்தவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது. நமதூர் வாக்குசாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வெயிலையும் பொறு படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நமதூரை பொறுத்தவரை 67.45% சதவீதம் வாக்குகள் பதிவானது.மாலை 5.30 மணியளவில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்ல பட்டது. வரும் மே 13 ஆம் தேதி வாக்கு என்னபடுகிறது.....

Wednesday, April 13, 2011

சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குபதிவு இன்று தொடங்கியது. சுமார் ஒரு மாத காலமாக தமிழக முழுவதும் தலைவர்கள்.சுறாவளி சுற்றுபயணம் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. நேற்று அமைதியாக மக்களிடம் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர்.இன்று காலை சரியாக 8 மணிமுதல் வாக்கு பதிவு தொடங்கியது. அதிரை மக்கள் தங்களது வாக்கு சாவடியில் நீண்ட வரிசையில் நிர்ந்று வாக்களித்து வருகின்றனர். இது வரை அமைதியாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிவரை வாக்கு பதிவு நடைபெறும். வாக்களிக்காதவர்கள் மாலை 5 மணிக்குள் தவறாது வாக்களியுங்கள்...     

Thursday, April 7, 2011

அதிரையில் கலை கட்டுகிறது தேர்தல்........

தமிழகத்தில் வருகிற 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அதிரையும் விதிவிலக்கு அல்ல. பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக  வேட்பாளர் ஏன்.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் நமதூர் அண்ணா சிலை அருகே பேசினார். காங்கிரஸ் வேட்பாளர் ஏன்.ஆர்.ரெங்கராஜன் நேற்று மாலை முதல் இரவு வரை அதிரை முழுவதும் வாக்கு சேகரித்தார்.அவர் செல்லும் வாகனம் முன் இசை முழங்க வாக்கு சேகரித்தது நமதூர் மக்களுக்கு கந்தூரி போல் காட்சியளித்தது.இன்று காலை முதல் ஒலிபெருக்கியில் விளம்பரம்  போட்டு கொண்டு ஊர்முழுவதும் வளம் வருகிறது சட்டை சின்னம். நமதூரில் வெட்டி பேச்சு இடமான செக்கடி மோட்டில் தேர்தல் வாக்குவாதம் அரங்கேறுகிறது. இதனால் அதிரையே கலை கட்டுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒரு வரேமே உள்ள நிலையில் அதிரை நகறேமே அதிர்கிறது. அதிரையிலிருந்து முஸ்லிம்மலர் ஹசன்.              

Tuesday, April 5, 2011

அதிரை அல்-அமின் பள்ளிவாசல் பொதுக்கூட்டம்......

முஸ்லிம் மலர் வாசகர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
  • நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை அல்-அமின் பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நமதூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். PFI   மற்றும் தமுமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆலிம்கள் மற்றும் அல்-அமின் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
  • ஆரம்பம் அல்ஹம்து சூராவுடன் அல்லாஹ்வின் பேரருளால் தொடங்கியது. அமிராக அன்சாரி (குலாப்ஜான்) தேர்தெடுக்கப்பட்டார்.   
  • இதில் நில வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அல்-அமின் பள்ளி பிரச்னை தீர்த்து வைப்போம் எங்களுக்கு ஆதரவளியுங்கள்  என்று நச்சரித்து வருகின்றனர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது அப்போது சில சகோதரர்கள் வாக்குறிதிகளை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கவேண்டும் என ஆலோசனையை முன்வைத்தனர்.
தீர்மானங்கள்:
  1. அல்-அமின் பள்ளி பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
  2. தொடர்ந்து அல்-அமின் பள்ளிக்கு இடையுறு செய்யும் திமுக கூட்டணிக்கு இத்தேர்தலில் வாக்களிக்க கூடாது.நீங்கள் விரும்பியவர்களுக்கு திமுகவை தவிர வாக்களிக்கலாம்.
  3. எந்த முறையில் அல்-அமின் பள்ளி தொடர்பாக வாக்குறிதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என மனப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
  4. பேரூராட்சியில் திமுக சார்பில் உள்ள உறுப்பினர்களே உள்ள நிலையில் நமதூரிலுள்ள சமூக அக்கறையுள்ள இளைஞர்களை பேரூராட்சி தேர்தலுக்கு சுயேட்சையாக போட்டியிட வைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.          
  5. வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-O என்ற விண்ணப்பதை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த பட்டது.


    Sunday, April 3, 2011

    அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறுமா?.......

    அதிரை மக்கள் நீண்டகாலமாக சில கனவுகளை மனதிற்குள்ளே வைத்து வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.
    இந்த கனவுகள் நிறை வேற உங்கள் வாக்குகளை தான் பேரமாக வைக்க வேண்டும்.
    ரூ.100 க்கும் 200 க்கும் ஆசைப்பட்டு உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள். அரசியல் கட்சிகள் உங்கள் ஓட்டுகளை வைத்து அவர்கள் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் குளிர் காய்கிறார்கள். ஒட்டு போட்ட நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். நீங்கள் போய் கேட்டால்.அதான் பணம் தந்தோமே என்பார்கள். விலை மதிப்பில்லாத உங்கள் ஓட்டுக்களை அற்ப காசுக்காக விலைபோக போகிறீர்களா?. ஒட்டு உங்கள் உரிமை அதை நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு பயன்படும் கருவியாக மாற்ற இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள்:
    1. தெருக்கோடியில் இருந்த ஊர்களெல்லாம் நகராட்சியை இருக்கும் போது  நகராட்சிக்குரிய அணைத்து தகுதிகள் இருக்கும் அதிரை மூன்றாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். 
    2. அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உறைதல் வேண்டும்.
    3. அதிரையில் ஆபத்து நேரத்தில் உதவ உருபடியாக ஒரு மருத்துவமனையும் இல்லை.அதிரையின் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை முழுநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்தல் வேண்டும்.
    4. அதிரையில் பெருகிவரும் வாகன விபத்துகளால் பதிக்க படுவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நமதூருக்கு தனி 108  ஆம்புலன்ஸ் செயல் படுத்துதல் வேண்டும்.
    5.  அதிரையில் தீவிபத்து ஏற்பட்டால் அணைக்க உதவும் தீயணைப்பு வண்டியுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைதல் வேண்டும்.
    6. அதிரை-கும்பகோணம் மார்க்கத்தில் இது வரை பேருந்து வசதி கிடையாது. இதனால் அதிரை மற்றும் மதுக்கூர் மக்களின் போக்குவரத்து தூரம் தேவையில்லாமல் அதிகமாகிறது. இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.
    7.   அதிரை நகரில் பேருந்து நிலைய இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கஷ்டபடுகிறார்கள். அவர்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க பட வேண்டும்.
    8. கடந்த இரண்டு வருடமாக நமதூரில் செயல்பட்ட வருவாய் அலுவலர் தற்போது இல்லை.இதனால் பொது மக்கள் வருமான சான்றிதழ் போன்ற பல்வேறு காரணங்களுக்காக  பட்டுகோட்டை செல்ல வேண்டிய நிலையுள்ளது. உடனே நமதூருக்கு வருவாய் அலுவலர் தேவை.
    இந்த கோரிக்கைகளை  உங்கள் வீடு தேடி வரும் வேட்பாளரிடம் இதை செய்தல் உங்களுக்கு ஒட்டு போடுவோம் என கூறி நமதூரின் தலையெழுத்தை உங்கள் ஓட்டினால் மாற்றுங்கள்.
    சிந்திக்கும் திறன் கொண்ட மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.....  

    Thursday, March 31, 2011

    உற்சாக கூட்டம்.....


    இந்த வரிசையை பார்த்தல் உங்களுக்கு என்ன தோன்றுகிறது.இது ரேஷன் கடை அல்ல நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது அல்லவா அதை காண நமதூர் ரசிகர்கள் கூடி நிற்கிறார்கள். வழக்கம் போல் நமதூரில் நேற்று மதியமும் 03 மணிமுதல் 06 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து.வெளியில் யாராவது மொபைல் வைத்திருந்தால் ஸ்கோர் பார்க்கலாம் என எண்ணி வந்தனர். நடுத்தெருவில் ஒரு கடையில் இன்வேர்ட்டர் மூலம் மேட்ச் பார்த்து கொண்டிருந்தனர்.இதனால் அங்கு ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்தியா வெற்றி பெற்றதும். பாகிஸ்தான் ரசிகர்களை இந்தியா ரசிகர்கள் கலாய்க்க நமதூரில் நேற்று இரவு முழுவதும் வெடிவெடித்து வெற்றியை கொண்டாடினார்கள்.இறுதி ஆட்டம் நடக்கும் போது மின் நிறுத்தம் இருக்க கூடாது என ரசிகர்கள் விரும்புகிறார்கள். நமதூர் மின் வாரியம் என்ன  செய்யும் பொருத்து இருந்து பார்ப்போம். 

    Wednesday, March 30, 2011

    அதிரையில் தேர்தல் பிரச்சாரம்..!..!..!..!..



    பட்டுகோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏன்.ஆர்.ரெங்கராஜனை ஆதரித்து நேற்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
    மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி தி.மு.க. மட்டும்தான்; ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான். நாங்கள் ஓட்டு கேட்கும் போது, சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறோம்.
    5 வருடங்கள் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, ஏற்கனவே தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்த பெருமையுடன் தலைநிமிர்ந்து உங்களை சந்திக்கிறோம். ஆனால், எதிர்த்தரப்பில் உள்ளவர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் தரக்குறைவாக பேசி ஓட்டு கேட்கின்றனர்.
    தமிழகத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால், ஒன்று கருணாநிதியை வாழ்த்தி, பாராட்டி பேசி நடத்த வேண்டும். அல்லது எதிராக பேசி நடத்த வேண்டும். ஆனால், அவரைத் தவிர்த்துவிட்டு அரசியல் நடத்த முடியாது.   தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர்தான் மற்றவர்கள் வெளியிட்டார்கள்.
    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பார்த்த பிறகுதான் அவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முதல்-அமைச்சர் கருணாநிதி செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்துதான் பல ஆட்சிகள் நடைபெறுகின்றன.
    அனைவருக்கும் முன்னோடியாக உள்ள ஆட்சி, வழிகாட்டும் ஆட்சி தி.மு.க. ஆட்சி. இத்தகைய ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.   சிலர் தேர்தலில் தோற்றுவிட்டால், மலைவாசஸ்தலத்திற்கு சென்றுவிடுவார்கள். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி எந்த காலத்திலும் மக்களை கைவிட மாட்டார்.
    13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் அவர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறார். போராடி இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் தோற்றால், அடுத்த தேர்தலின் போது தான் மக்களை எட்டிப்பார்க்கிறார்.
    சில அறிக்கைகள் விடுவார். அதைத்தவிர மக்களுக்காக எதைச் செய்தார்? எதற்காக போராடினார்? தேர்தல் வரும் போது தான் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்.   கடந்த தேர்தலில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு அடுத்த தேர்தல் அறிக்கையை வெளியிடுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. ரூ. 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார். உழவர் சந்தைகளுக்கு புதுப்பொலிவு தந்துள்ளார்.
    கடந்த ஆட்சியில் குவிண்டாலுக்கு ரூ.600 என்று இருந்த நெல்லுக்கான விலையை, ரூ.1,050 ஆக உயர்த்தினார். இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பல புதுமையான திட்டங்களை அறிவித்துள்ளார். உழவர்களைத் தேடி இடுபொருட்கள் வரும் என்று கூறி உள்ளார்.
    பெண்கள் படிப்பதற்காக, திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்குகிறார். கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.   அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு 4 மாத காலமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
    ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால், வராது, ஆனால் வந்தால் மக்களின் மனதில் உள்ள ஒரே உணர்வு பயமாகத்தான் இருக்கும். முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சி, அனைவருக்கும் பெய்யும் மழையாக நன்மை பயக்கிறது. எனவே, தி.மு.க. கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார்.

    Tuesday, March 29, 2011

    வரும் ஆனா வராது.................................

    •  இதை நாம் வடிவேல் காமெடியில் தான் கேட்டு இருக்கிறோம் ஆனால் நமதூர் மருத்துவர்களை பார்த்தால் இதை தவிர வேறெதை சொல்ல முடியும்.உடல் நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை தேடி செல்கிறோம். செல்ல முடியாமல் போனால் வீட்டிற்கு அழைத்து வருவதுதான் வழக்கம். ஆனால் நமதூர் மருத்துவர்கள் வீட்டிற்கு ஆபத்தான நேரத்தில் அழைத்தால் கூட வருவதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. மருத்துவ சேவை என்பது பொது சேவையாகும். ஆபத்தான் நேரத்தில் உதவுவதுதான் அவர்களின் பணியாகும். 
    • நமதூரில் நடந்த சம்பவம்: சில நாட்களுக்கு முன் இரவில்  பிள்ளை பெற்ற பெண் ஒருவர்க்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே நமதூர் மருத்துவர்களை வீட்டிற்கு அழைத்த போது வர மறுத்து விட்டனர். வலிப்பு அதிகமாகி தன்னுடைய நாக்கை இரத்தம் ஊற்றும் அளவிற்கு கடித்துள்ளார் அந்த பெண். இவ்வளவு ஆபத்தையும் உணர்த்த மருத்துவர்கள் கடைசி வரை அந்த பெண்ணின் வீட்டிற்கு வரவே இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய செயலாகும்.
    • சமூக சீர்திருத்த வாதிகளே! எல்லாதிற்கும் இயக்கம் பேசும் இயக்கவாதிகளே! நமதூரில் உள்ள மருத்துவர்களை ஆபத்தான நேரத்தில் உதவ வலியுறத்த வேண்டும். இல்லையேல் நமதூர் ஷிபா மருத்துவமனயில் சமூக அக்கறையுள்ள மருத்துவர்களை கொண்டு வரே வேண்டும். நமதூர் மாணவர்களை மருத்துவத்திற்கு படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.                

    அதிரையில் உடனடி போட்டோ

    அதிரையில் உடனடி போட்டோ
    இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

    SIS computer service

    SIS computer service
    இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163