Wednesday, March 30, 2011

அதிரையில் தேர்தல் பிரச்சாரம்..!..!..!..!..



பட்டுகோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏன்.ஆர்.ரெங்கராஜனை ஆதரித்து நேற்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி தி.மு.க. மட்டும்தான்; ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான். நாங்கள் ஓட்டு கேட்கும் போது, சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறோம்.
5 வருடங்கள் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, ஏற்கனவே தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்த பெருமையுடன் தலைநிமிர்ந்து உங்களை சந்திக்கிறோம். ஆனால், எதிர்த்தரப்பில் உள்ளவர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் தரக்குறைவாக பேசி ஓட்டு கேட்கின்றனர்.
தமிழகத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால், ஒன்று கருணாநிதியை வாழ்த்தி, பாராட்டி பேசி நடத்த வேண்டும். அல்லது எதிராக பேசி நடத்த வேண்டும். ஆனால், அவரைத் தவிர்த்துவிட்டு அரசியல் நடத்த முடியாது.   தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர்தான் மற்றவர்கள் வெளியிட்டார்கள்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பார்த்த பிறகுதான் அவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முதல்-அமைச்சர் கருணாநிதி செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்துதான் பல ஆட்சிகள் நடைபெறுகின்றன.
அனைவருக்கும் முன்னோடியாக உள்ள ஆட்சி, வழிகாட்டும் ஆட்சி தி.மு.க. ஆட்சி. இத்தகைய ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.   சிலர் தேர்தலில் தோற்றுவிட்டால், மலைவாசஸ்தலத்திற்கு சென்றுவிடுவார்கள். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி எந்த காலத்திலும் மக்களை கைவிட மாட்டார்.
13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் அவர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறார். போராடி இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் தோற்றால், அடுத்த தேர்தலின் போது தான் மக்களை எட்டிப்பார்க்கிறார்.
சில அறிக்கைகள் விடுவார். அதைத்தவிர மக்களுக்காக எதைச் செய்தார்? எதற்காக போராடினார்? தேர்தல் வரும் போது தான் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்.   கடந்த தேர்தலில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு அடுத்த தேர்தல் அறிக்கையை வெளியிடுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. ரூ. 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார். உழவர் சந்தைகளுக்கு புதுப்பொலிவு தந்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குவிண்டாலுக்கு ரூ.600 என்று இருந்த நெல்லுக்கான விலையை, ரூ.1,050 ஆக உயர்த்தினார். இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பல புதுமையான திட்டங்களை அறிவித்துள்ளார். உழவர்களைத் தேடி இடுபொருட்கள் வரும் என்று கூறி உள்ளார்.
பெண்கள் படிப்பதற்காக, திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்குகிறார். கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.   அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு 4 மாத காலமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால், வராது, ஆனால் வந்தால் மக்களின் மனதில் உள்ள ஒரே உணர்வு பயமாகத்தான் இருக்கும். முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சி, அனைவருக்கும் பெய்யும் மழையாக நன்மை பயக்கிறது. எனவே, தி.மு.க. கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163