Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Saturday, October 20, 2012

சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்


(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.
எனவே அந்த நாட்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீது அதாவது { லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ்} அதிகமாகக் கூறுங்கள் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)
எனவே அந்த நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும் இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீசுகளையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். 
இந்த சிறப்பான காலத்தில் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா  விடம் கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் அல்ல. 
'(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) . 
எனவே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.

Wednesday, October 17, 2012

26th oct-முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம்



சவூதி அரேபியாவின் அதி உயர் நீதிமன்றங்களின் சபையின் தீர்மானத்திற்கிணங்க ,இவ்வருட துல் ஹஜ் மாத முதல் தினம் , புதன் கிழமை , அக்டோபர் 17 உம் , அரபா தினம் 9 வது நாள் துல்ஹஜ் வியாழக்கிழமை , அக்டோபர் 25 ம் திகதி , முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம் 10 வது நாள் துல்ஹஜ் , வெள்ளிக்கிழமை , அக்டோபர் 26 ம் திகதியும் என , அகில இந்திய  ஸலப் கவுன்சில் அறிவித்துக் கொள்கிறது.

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163