Showing posts with label 10th. Show all posts
Showing posts with label 10th. Show all posts

Friday, May 27, 2011

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. அதே போல மெட்ரிக் தேர்வு,ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் தேர்வுகள் முடிவுகளும் இன்று காலை வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.

இந் நிலையில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.

இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின்றன.

மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தட்ஸ்தமிழ் மற்றும் அரசு இணையத் தளங்களிலும் உடனுக்குடன் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்கள் ஜுன் 20ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை வருகிற 30ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 3ம்ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மொழி பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305. இதர பாடங்களுக்கு ரூ.205. மெட்ரிக் பாடத்திற்கு ரூ.305. ஆங்கிலோ-இந்தியன் மொழிப்பாடத்திற்கு ரூ.205. மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் பள்ளி மூலமாக வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து பள்ளியில் ஜுன் 3ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், 2011க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு கட்டணம் ரூ.125. மெட்ரிக் ஒரு பாடத்திற்கு ரூ.135. இரண்டு பாடங்களுக்கு ரூ.235. மூன்று பாடங்களுக்கு ரூ.335.

ஆங்கிலோ- இந்தியன் தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.85. இரண்டு பாடங்களுக்கு ரூ.135. மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணம் செலுத்த வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு ஜுன் 30ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 9ம்தேதி வரையும் நடைபெறும்.
முஸ்லிம்மலரிலும் தேர்வு முடிவுகளை காணலாம்...... 

Friday, May 22, 2009

நாளை 10ம் வகு‌ப்பு‌த் தே‌ர்வு முடிவுக‌ள்

த‌மிழக‌த்‌தி‌ல் ந‌ட‌ந்து முடி‌ந்த 10ம் வகு‌ப்பு‌த் தே‌ர்வு முடிவுக‌ள் நாளை வெ‌ளி‌யிட‌ப்பட உ‌ள்ளது. மாணவ‌ர்க‌ள் பெ‌ற்ற ம‌தி‌‌ப்பெ‌ண்களையு‌ம் அ‌ன்றைய ‌தினமே ப‌ள்‌ளிக‌ளி‌ல் அ‌றி‌ந்து கொ‌ள்ளவு‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவு 23-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும். அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக தங்களின் மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், இணையதளங்கள், செல்போன் எண்கள், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
இணையதளங்கள் :

Saturday, May 16, 2009

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 28-ந்தேதி வெளிவருகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள். இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள் பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள். 10-ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன்பாடத்திட்டதின் கீழ் 4697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் கீழ் 1361 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணியும் நிறைவடைகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு இந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த ஆண்டை விட 5 நாட்கள் தாமதமாக முடிவு வெளியானது.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தள்ளிப்போகிறது. வருகிற 28-ந்தேதி தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள் ளது. அதற்கு முன்னதாக வெளியிட தேர்வுத் துறை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு 25-ந்தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகின்றன. டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் பிரிண்ட் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 22-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடியும் அதன் பிறகு மாவட்ட வாரியாக மதிப்பெண் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163