Showing posts with label இஸ்லாமிய தகவல்கள். Show all posts
Showing posts with label இஸ்லாமிய தகவல்கள். Show all posts

Monday, January 27, 2014

மீலாத் விழா - ஒரு பார்வை

மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 

ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

Friday, September 21, 2012

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தற்காத்து நிற்க சிறந்த வழி அவரது ஸுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்று ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் ,
வலியுறுத்தினார். நபியவர்களின் பண்புகள் மற்றும் வாழ்க்கை வழி முறைகள் பரப்பப்பட்டதால் தான் இஸ்லாமியம் மதிப்புகள் பரவியது என்றும் கூறினார்.

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அ ப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.

இது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையோ இஸ்லாத்தையோ பாதிக்காது . ஏனெனில், நபியை யார் வெறுக்கிறாரோ அவர் தான் சந்ததி அற்றவர் ( இந்த உலகத்திலும் மறுமையில் இருந்தும் எல்லா நலவுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டவர். ) அத்தியாயம் 108, வசனம் 3) என்று அல்லாஹ் சுபஹானஹு தாலாஆ அல்குர் ஆனில் கூறி விட்டான்.

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகையில் இந்த குற்றவியல் முயற்சியை கண்டித்து முஸ்லிம்கள் அப்பாவி மக்களை கொலை செய்வதாலும் மற்றும் பொது சொத்து வசதிகளை தாக்குவதாலும் தங்கள் கோபத்தை முன்னிறுத்த அனுமதிக்க கூடாது.

மாற்றமாக முஸ்லிம்களின் செயல்பாடுகள் அல்குர் ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முஸ்லிம்கள் தங்கள் கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்றால், இந்த படத் தயாரிப்பாளர்கள் அவர்களின் இலக்குகளை அடைந்துக் கொள்வார்கள்.

அனைத்து நபிமார்கள் , ரசூல்மார்களை கேலி செய்யும் செயலை , சமூக விரோத செயல் என ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அனைத்து உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் . 

Sunday, January 1, 2012

நிஹ்மதுகளில் எல்லாம் சிறப்பானதும் இஸ்லாத்தின் அந்தஸ்தும் கிறிஸ்த்தவ வருட கொண்டாட்டங்களும்


الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي أما بعد


இஸ்லாத்தை எங்களுக்கு மார்க்கமாக அங்கிகரித்து இன்னும் அதனை எங்களுக்கு நிஹ்மத்தாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் சுபஹானஹுத்தாலா சொல்கிறான். எனவே, இந்த நிஹ்மத் அருளப்பட்ட நிஹ்மத்களில் மிகவுமே சிறப்பானது என்பது உறுதியானதாகும். 

இந்த சிறப்பான நிஹ்மத்தை எந்த ஒரு காரணத்திற்காக வேண்டியும் யாருக்கும் வேண்டியும் விட்டுக் கொடுக்க முடியாது. அந்த அடிப்படையில் , இந்த நிஹ்மத்திற்கு மாற்றமானது தான் ஏனைய மதங்களும் அதன் வழிப்பாடுகளும் கொண்டாட்டங்களும் ஆகும் என்பது யாவரும் அறிந்ததே. 

இந்த அடிப்படையில், கிறித்தவ மார்க்கம் என்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு மதம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்த கிறித்தவ மார்கத்தின் வழிபாடுகளில் ஒன்று தான் கிறித்துமஸ் பண்டிகையும் அதனை தொடர்ந்து வரக் கூடிய 
கிறித்தவ புது வருட கொண்டாட்டங்களும் ஆகும். 

இந்த கிறித்தவ மார்க்க அனுஷ்டானங்களில் உள்ளது தான் அதனை முன்நோக்கி அவர்களது பண்டிகை கால அலங்காரங்களும், அதனை வாழ்த்தி , பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை தெரிவிப்பதும், விசேட உணவு வகைகளை பரிமாறிக் கொள்வதும், புத்தாடை அணிவதும், சுப நேர கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதும் ஆகும். 

இந்த நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பாக வியாபாரிகளும் பொது மக்களும் இந்த கொண்டாட்டத்திற்கு வேண்டிய பொருட்களையும் சேவைகளையும் விசேடமாக வழங்குபவர்.
இப்படியான இந்த கிறித்தவர்களின் விசேடத்திற்கு எம்முடைய முஸ்லிம்களும் விசேட ஏற்பாடுகளை செய்து கொடுத்து , அல்லாஹ் அருளிய நிஹ்மத்தை விற்று விளையாடுகின்றனர். முஸ்லிம்களும் தனது வியாபார ஸ்தாபனங்களை அலங்கரிக்க வேண்டுமா ? விசேட கழிவு விலையில் விற்பனை செய்ய வேண்டுமா ? நத்தார் க்கு என்ற குறிப்பிட்ட அலங்கார பொருட்களை முன்கூட்டியே இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டுமா ? நத்தார் மற்றும் புது வருட விசேட வாழ்த்து அட்டை அச்சிட்டு விற்பனை தான் செய்ய வேண்டுமா ? வங்கிகளில்
சுபவேளை கொடுக்கல் வாங்கல்களில் தனது பங்களிப்பை தவறாமல் செலுத்தத்தான் வேண்டுமா ? 

இவைகள் அனைத்தையும் செய்வதற்கு உலமாக்கள் என்ற மௌலவிகளின் பத்வாக்களும் , மார்க்க உபன்னியாசங்களும் தான் பஞ்சமா ? 

இப்படி அல்லாஹ் அருளிய நிஹ்மத்தான தீன் இஸ்லாம் என்பதை கூட மறந்து, அல்லாஹ்வின் உரிமைக்கே முஸ்லிம் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை கூட மறந்து , யூத நசாரக்களின் கொண்டாட்டங்களுக்கு தனது ஒத்துழைப்பை வழங்கு வதில் எமது முஸ்லிம்கள் பின்வாங்குவதில்லை ! 

கேட்டால், மத நல்லிணக்கம் என்பான், வாடிக்கையாளர் சேவை என்பான் , மாற்று மதத்தாருடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பான். ஆனால், அல்லாஹ்வுடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதை
மறந்து விடுகிறான், இன்னும், அல்லாஹ்வின் நல்லிணகத்தை பெற தவறி விடுகிறான். இத்தனையையும் செய்து மாற்று மதத்தவர் உள்ளத்தை வெற்றிக் கொள்ள முனைகிறான், அல்லாஹ்வின் திருப்தியை குழி தோண்டி புதைக்கிறான்.
இல்லாவிட்டால், அவர்கள் எமக்கு வாழ்த்து சொன்னால் பதில் சொல்ல மார்க்க ஆதாரம் தேடுகிறான். அவர்கள் உணவு தந்தாள் அதனை எடுப்பதற்கு ஆதாரம் தேடுகிறான். பல்லின மக்கள் மத்தியில் வியாபாரம் செய்யும் போது இவைகள் தவிர்க்க முடியாது என்கிறான். 

ஆனால், இந்த பல்லின மக்கள் மத்தியில் அருமை நபியும் அருமை சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மறந்து விட்டான். அந்த அருமை நபியை விட, அந்த அருமை சஹாபாக்களை விட
இஸ்லாத்தை பரப்ப நவீன யுக்திகளை பாவிக்க முனைந்து , அந்த உத்தமர்களை விடவும் முந்தி , புதிய யுக்திகளை கையாள்வது ஹராம் என்பதை மறந்தும் விட்டான். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 

அல்லாஹ்விடம் அங்கிகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும். எனவே, ஏனைய எந்த மார்க்கமும் அங்கிகரிக்கவும் பட மாட்டாது அத்தோடு அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது பாவம் என்பதனையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

அல்லாஹ் அருளிய மிகப் பெரிய நிஹ்மத்தான எங்கள் இஸ்லாத்தை ஒரு அணுவளவும் விட்டுக் கொடுக்க முடியாது. அதே போன்று இஸ்லாம் அல்லாத ஏனைய மார்கத்தின் எந்த வொரு காரியத்தையும் ஆமோதிக்கவும் அனுசரிக்கவும் கூடாது என்பதனையும் முஸ்லிம் உணர வேண்டும்.
இதனையே அல்லாஹ் மிகத் தெளிவாக லகும் தீனுக்கும் வழியத்தீன் என்று , உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம் என்று கூறி விட்டான். 

மேலும், இந்த குப்பார்களின் பண்டிகையை சம்பந்தப்பட்ட காரியங்களை அனுமதிப்பதும் , ஆமோதிப்பதும் அதில் ஈடுபடுவதும் உள்ளத்தில்
குப்ர் இருப்பதன் அடையாளம் என்று அஹுளுஸ் சுன்னா வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். 

''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே'' 


என்பது தான் அது! 

Thursday, December 29, 2011

ஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்


இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்திட அல்லாஹ் அவனின் இறுதித் தூதராக முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பி அவர்கள் மீது அவனின் கடைசி வேதம் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஸுலாகப் பிரகடனப்படுத்தப்பட்டது முதல் அவர்கள் வாழ்வின் இறுதி நாள் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் எவர் எவரெல்லாம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் சந்தித்து மரணிக்கும்போது முஸ்லிம்களாக மரணித்தனரோ அவர்கள் ஒவ்வொருவரும் ‘சஹாபி’ என அழைக்கப்படுகின்றனர். ‘சஹாபி’ என்ற பதம் மொழி வழக்கில் தோழர் எனும் அர்த்தத்தை சுமந்திருந்த போதிலும் இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் முன்னர் கூறப்பட்ட அர்த்தத்திலேயே தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.

அருமை நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தன்னந்தனியாக அல்லாஹ்வின் தூதை எடுத்துக்கொண்டு மக்கள் முன் சென்ற வேளை அவர்களுடன் கைகோர்த்து முன் நின்று இஸ்லாத்தை பரப்புவதில் தியாக சிந்ததையுடன் இயங்கிய மக்கா முஸ்லிம்கள், பின்னர் நபியவர்கள் மதீனாவுக்குச் சென்று இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபட்ட வேளை அங்கு வைத்து ஒத்துழைத்த மதீனா முஸ்லிம்கள் அனைவரும் பொதுவில் சஹாபிகளாவர். 

இம்மாமனிதர்களை சந்தேகத்துக்கு இடம் வைக்காது அல்லாஹ் அவர்களை மிகச் சரியான அளவுகோல் கொண்டு அளந்து விட்டான். அவர்கள் யார்? அவர்களின் சிறப்பு, மகிமை, அந்தஸ்து என்ன? இதோ குர்ஆனும் ஸுன்னாவும் பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ


“முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் முன்னைய முந்தியவர்கள் மேலும் அவர்களை நன்முறையில் பின்பற்றினார்களே அவர்கள் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். மேலும் அவர்கள் அவனைப் பொருந்திக்கொண்டார்கள். மேலும் அவற்றுக்குக் கீழால் ஆறுகள் ஓடக்கூடிய சுவனங்களை அவர்கள் அவற்றில் நிரந்தரமாக இருக்கும் நிலையில் அவன் அவர்களுக்கு தயார் செய்து வைத்துள்ளான். அது மகத்தான வெற்றியாகும்”. (09:100)

النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ


‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் )

நபித் தோழர்கள், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் குர்ஆனையும் சுன்னாவையும் நபித் தோழர்களுக்குப் போதித்தபோது அதன் மூலம் தான் நாடும் கருத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். நபித் தோழர்கள் அல் குர்ஆனை அதன் கருத்துக்களைப் பூரணமாகப் புரிந்து கொண்டார்கள் . எனவேதான் அல் குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித் தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.

அல் குர்ஆன் சுன்னா வாசகங்கள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, இதற்காக அல் குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், ஏனைய உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள் என்பதையும் அறிதல் வேண்டும்.
அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில் நின்று விளங்க முயற்சிக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த அமசம் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஏனெனில் அல் குர்ஆன் சுன்னாவை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டபோதே இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகேடுகள் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.

எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது. ஒரு விடயத்துடன் எந்த ஆயத் தொடர்புடையுது. எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது .அதேபோன்று  எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது. இன்னும் எது தொடர்பற்றது .இவையனைத்தையும் அருமை சஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள் .  ஆயத்துக்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்து  விளங்குவது என்பதையும் நபி அவர்கள் ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்து  ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தேவையான விளக்கங்களை கற்றுக்கொடுத்தார்கள் . 

ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாக திகழ்ந்தும் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை.  அவர் அவர்களுது தேவைக்கேற்ப அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை.  நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கவில்லை.  இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள்.  இதனால்தான் அந்த ஸஹாபாக்களின் காலத்தில் பித்அத் என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.

அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை.  அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை.  இதனால் அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதுக்கவில்லை.  எபபொழுது உம்மத்தே இஸ்லாமியா ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டிவிட்டார்களளோ அன்று தொடக்கம் ஒவ்வொருவரும் குர்ஆன் விடயத்தில் தான்தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விடயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வர ஆரம்பித்து விட்டன. அவனுடைய விளக்கத்திற்கு சார்பாக  அவர்களுக்குத் தோன்றியது போன்று  ஆயத்துக்களையும் ஹதீஷஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் 
இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள்.  இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், சர்ச்சைகள் என்று ஆகிவிட்டது.  நிச்சயமாக குர்ஆன் ஆயத்துக்களினாலும் ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும்.    
ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது.  ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமிலர்.  அந்தளவு தூரம் விளங்கிய அவாகள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான் வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையேயாகும்.  அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது.  அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தன.  அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. விடயங்கள் அனைத்தும் ஒரு அடிப்படையோடு இருந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.
ஆம்! அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை  சொல்லும்போது, கேட்கும்போது, எழுதும்போது ‘ரழியல்லாஹு அன்ஹ்’ என்று கூறுவது சிறப்பாகும். அவர்களின் நேர்மையை நம்ப வேண்டும். இஸ்லாத்தில் அவர்கள் முந்தியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது சிறப்புக்களைப் பரப்ப வேண்டும். மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். அவர்களை வெறுப்பவர்கள், கோபிப்பவர்கள், நிந்திப்பவர்கள், குறைசொல்பவர்கள், நையாண்டிபண்ணுபவர்கள், விமர்சிப்பவர்கள், இழித்துப் பேசுபவர்கள், ஏசுபவர்கள், திட்டுபவர்கள், சபிப்பவர்கள், மட்டு மரியாதையற்ற முறையில் அவர்களைக் கையாளுபவர்கள் போன்றோரை விட்டு நீங்கி இருத்தல் வேண்டும். இவை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமா அத்தினரின் நம்பிக்கைக் கோட்பாடான அகீதா  சார்ந்ததாகும்.
சிறப்புமிக்க நபித் தோழர்களை கண்ணியப்படுத்துவது நேசிப்பது என்பது சர்வ சாதாரணமான விடயமன்று. உண்மையில் அது முழுக்க முழுக்க அகீதாவுடன் பின்னிப்பிணைந்தது, இதில் ஏற்படுகின்ற கொஞ்சநஞ்ச அசைவும், ஆட்டமும், தளர்வும்கூட மிகப் பாரதூரமானது. ஏனெனில் சஹாபிகள் ஊடாகத்தான் குர்ஆனையும் ஸுன்னாவையும் அப்பழுக்கற்ற முறையில் அணு அணுவாக அப்படியே அல்லாஹ் பாதுகாத்து அடுத்தவர் கையில் தவழச் செய்தான். அவர்களின் முதன்மையில், நேர்மையில், மகிமையில் ஊறு ஏற்படுமென்றால் அது இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கே சந்தேகமின்றி பங்கம் ஏற்படுத்தும்.
கண்ணியமிக்க நபித் தோழர்களை ஏதோ நம்மைப் போன்று சாமானியர்களாக எண்ணுவது, நோக்குவது, கையாளுவது வளர்ந்து, முற்றி அவர்களை தரக்குறைவாக பேசவும், எழுதவும், வாய்க்கு வந்தவாறெல்லாம் தாறுமாறாக விமர்சிக்கவும் இன்று சமூகத்தில் சிலர் தலைப்பட்டுள்ளனர். இப்போக்கு இத்தகையோரது நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டம்காணச் செய்யும். சஹாபிகளை வெறுப்பவர் காஃபிர் என இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அறுதியாக, உறுதியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 

பின்வரும் ஹதீஸ் கவனத்துக்குரியது.
‘என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! எனக்குப் பின் அவர்களை நீங்கள் இலக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம்! எவர் அவர்களை நேசித்தாரோ என்னை நேசிப்பதன் நிமித்தம் அவர் அவர்களை நேசித்தார். மேலும் எவர் அவர்களை வெறுத்தாரோ என்னை வெறுப்பதன் நிமித்தம் அவர் அவர்களை வெறுத்தார். மேலும் எவர் அவர்களை துன்புறுத்தினாரோ திண்ணமாக அவர் என்னை துன்புறுத்தி விட்டார். என்னை எவர் துன்புறுத்தினாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துன்புறுத்தி விட்டார். எவர் அல்லாஹ்வை துன்புறுத்தினாரோ அல்லாஹ் அவரைப் பிடிப்பான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்:திர்மிதி).

தம்மை, தம்மிடமிருந்தவற்றை அப்படியே இஸ்லாத்துக்காக அர்ப்பணிப்பு செய்த நபித் தோழர்கள், யதார்த்தத்தில் தீனுல் இஸ்லாத்தின் பாதுகாப்பு அரண்கள் , இஸ்லாத்தின் தூண்கள் , அவர்களின் உதிரம் அதன் நீர், அவர்களின் தியாகம் அதன் உரம். மனமார ஏற்போம்! மதிப்போம்! போற்றுவோம்! கண்ணியப்படுத்துவோம்!
அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தில் விளங்க முயற்சிபோம் . சஹாபிகளின் சிறப்பு, பெருமையை பின்பற்ற வேண்டும் என்பதை  பறைசாற்றுகின்ற. குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அறிஞர் பெருமக்களின் கூற்றுக்களை அடிக்கடி எமக்கிடையே பிரஸ்தாபிக்க வேண்டும். இவ்வழியில் நம் உள்ளங்களில் அவர்களின் அன்பு பொங்கிப் பிரவகிக்கும், அவர்களின் நேசம் நிரம்பி வழியும். அருமை சஹாபாக்கள் மீதான அன்பை, மரியாதையை, அவர்களின் கண்ணியத்தை, அந்தஸ்தை நமது உள்ளங்களிலே ஊட்டி வளர்த்திட வேண்டும்.

ஆக, அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமாக.
இக்கட்டுரையின் ஆசிரியர் குறிப்பு : ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் ப‌ஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர். 
இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார். 

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் 
அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.

Monday, December 26, 2011

சிறு வயதில் திருமணமும் ஷரியத்தின் அனுமதியும்

reviving a forgotten sunnah.jpgஇஸ்லாமிய ஷரிஆவைப் பொறுத்தவரையில் திருமணம் முடிப்பதற்கான வயது இன்னதுதான் என்று வரையறை செய்யப்படவில்லை. மாறாக திருமணம் நிலையானதாகவும் அதன் நோக்கம் நிறைவேற்றத் தக்கதாகவும் குறித்த ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து, பருவ வயதை அடைந்த ஒரு ஆண் சுயமாகத் திருமணம் முடிக்க முடியும் என்றும் அவ்வாறே ஒரு பெண் பொறுப்பாளரினால் திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவாள் என்பதும் ஏகோபித்த முடிவாகும்.


பருவ வயதை அடையாத சிறுமிகளைப் பொறுப்பாளர் திருமணம் செய்துவைக்க முடியும் என்பது நான்கு மத்ஹபுகளினதும் இன்னும் சலபுஸ் சாலிஹீன்களினதும் வழிமுறையாகும். இதற்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையே போதுமானதாகும் . உதாரணமாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பருவ வயதை அடைய முன்னர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

நபியவர்கள் என்னை ஆறு வயதில் மணமுடித்தார்கள். ஒன்பது வயதில் என்னுடன் குடும்ப உறவில் ஈடுபட்டார்கள்.  (முஸ்லிம்:3544)

« الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ يَسْتَأْمِرُهَا أَبُوهَا »

(يزوجها)

திருமண பந்தத்தில் இணையவிருப்பது "சிறிய வயதுடையவர்களாக இருந்தால் அவர்களது பொறுப்பாளிகளே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்" 
{தாரகுத்னி}

நபியவர்கள் ஜாஹிலியாக்கால வழமையின் அடிப்படையில் இதனைச் செய்யவில்லை. மாறாக மார்க்க ரீதியான அனுமதி இருப்பதினாலேயே அவ்வாறு மணமுடித்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது:

ஆயிஷாவே கனவில் நீ மூன்று முறை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டாய்.ஒரு பட்டாடைத் துணியொன்றால் உன்னை போர்த்தியவன்னம் ஒரு மலக்கு என்னிடத்தில் காண்பிப்பார்.திறையை நீக்கிப்பார்த்தால் உன் முகம் தெரியும்.அப்பொழுதெல்லாம் 'இது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியென்றால் அவன் அதனை நடத்திவைப்பான்" என்று சொல்லிக் கொள்வேன்.என்று நபியவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். (முஸ்லிம்)

இதனால்தான் அல்குர்ஆனும் பருவயதடையாத பெண்கள் தலாக் சொல்லப்பட்டால் அவர்களது இத்தா கால எல்லை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا 

மாதவிடாய்க் காலத்தைக் கடந்த வயதிலுள்ள பெண்களதும், இதுவரை மாதவிடாய் வராத பெண்களதும் இத்தாக்கால எல்லை மூன்று மாதங்களாகும்.கர்ப்பிணிகளின் இத்தாக்காலம் கர்ப்பம் தரிக்கும் வரையில் (தலாக்:4)

இமாம் புஹாரி தலைப்பிடுகிறார்கள் - சிறிய இளம் பெண்களை திருமணம் செய்வதும் , திருமணம் செய்து கொடுப்பதும்.

இமாம் பைஹகி தனது கிதாப் மாரிஃபதுள் ஸுனன் வல் ஆஸார் அறிவிக்கிறார் 
இளம் சிறிய பெண் பிள்ளைகளை திருமணம் செய்வதும் , இளம் சிறிய பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பதும் சஹாபாக்களின் வழக்கமாக இருந்தது.

மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் சிறியவயதில் திருமண ஒப்பந்தத்தையும், உடல் தகுதி பெறும் வயதில் குடும்ப உறவை அனுமதிப்பதையும் காணலாம்.

பருவமடையாத பெண்களை தந்தையோ, பாட்டனோ மட்டுமே வலியாக நின்று முடித்துவைக்க முடியும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. ஷாபி மத்ஹபில் தந்தை அல்லது பாட்டன் பருவமடைந்த பின் மணமுடித்து வைப்பதயே சிறந்தது எனக்கருதுகின்றது. இமாம் அபூ ஹனீபா, அவ்ஸாபி போன்றோர் அனைத்து வலிகாரர்களுக்கும் பருவமடையாத பெண்ணை திருமணம் முடித்து வைக்க முடியும் எனக் கருதுகின்றனர். எனினும் அவள் பருவமடைந்ததும் அவள் விரும்பினால் 
ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமையும் அவளுக்கிருக்கிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். 

இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நபி சள்ளல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வஹியின் அடிப்படையிலேயே செயற்பட்டார்கள் என்பது எல்லா முஸ்லிம்களினதும் நம்பிக்கையாகும். குர்ஆனிய வசனங்களையும் ஹதீஸ்களின் ஆராதங்களையும் வரலாற்றையும் நோக்கும் போது நபிகளார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆறு வயதில் திருமணம் செய்ததும் ஒன்பது  வயதில் உறவு வைத்துக்கொண்டதும் ஜாஹிலிய்யாக்கால நடைமுறையில் இருந்த ஒரு விடயமாக இருந்தாலும் அது வஹியினடிப்படையில் உள்ள ஓர் அம்சமாகும் என்பதே மிகச்சரியானதாகும். இன்னும் இது நபி வழியாகும்.
  

 وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَىٰ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ  ۖ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். 5:83.

இலங்கையில் முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ 18 வயதை அடைந்திருத்தல் வேண்டும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் வயது வரையறை இல்லை. மாறாக 23வது விதியின் படி 12 வயதை அடையாத சிறுமியின் திருமணம் காதி  அனுமதித்தால் ஏற்றுக் கொள்ளலாம். 

பித்அத் செய்பவர்க்கு பின்னால் நின்று தொழுவது பற்றி இஸ்லாமிய ‌தீ‌ர்‌ப்பு என்ன ?


இமாம் புஹரிரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனதுநூலான ஹீஹ் அல் புஹாரியில்இ‌து தொடர்பான தலைப்பு ஒன்றையே இட்டுள்ளார்கள்அதனை முத‌லி‌ல்இங்கே குறிப்பிடுகிறோம்

குழப்பம் செய்பவனும் பித்அத் செய்பவனும் மாத் செய்வது.

நீ அவன் பின்னால் தொழுஅவனுடைய பித்அத் அவனுடனேஇருக்கட்டும் என ஹசனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.உபைதுல்லாஹ் ‌பி‌ன் அதீ
கூறியதாவது " உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுமுற்றுகையிடப்பட்டிருந்த போது 
நான் அவர்களிடம் செ‌ன்றுநீங்கள் மக்களுக்கு தொழுகை நடத்துகின்றஇமாம்மாக இருக்கின்றீர்கள்உங்கள் ‌மீது சோதனை ஏற்பட்டிருப்பதைகாண்கிறோம்இந்நிலையில் எங்களுக்கு குழப்பம் விளைவிக்கின்றவர்இமாம்மாக தொழுகை நடத்துகிறார்அதனால் நாங்கள் மன வேதனைஅடைகிறோம் எனக் கூறினேன்அதற்கு தொழுகை மக்கள் செய்கின்றசெயல்களில் ‌மிக‌ சிறந்த செயலாகும்மக்கள் அதை அழகான முறையில்செய்யும் போது நீயும் அவர்களோடு தொழுஅவர்கள் அதில்தவறிழைகின் போது அத் தவறுகளை விட்டும் நீ ஒதுங்கிக்கொள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்திலேயேஇஸ்லாமிய கிலாபத்தை அடியோடு இல்லாதொழிக்க பாடுபட்டவ்ர்களில்‌மிக முக்கியமாவான் தா‌ன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவாகும் என்பதுநாம் அறிந்ததுஅப்படியிருந்தும் அந்த கொடிய கெட்ட பாவியான பித்அத்காரர்களின் பின்னாலேயே தொழுவதற்க்கு உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்இன்னும்அப்படியான பித்அத் காரர்கள் தொழுகை நடத்துகின்ற போது நாம் எப்படிநடந்து கொள்ள வேண்டும் என்பதனை நாம் மேலே கவனித்த ஹதீஸில்உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தெளிவுபடுத்திஇருக்கிறார்கள்அதே போன்று தான் இமாம் அபூ ஜஹ்பர் அத் தஹாவிஅவர்கள் தனது அகீததுத் தஹாவி எனும் நூலில் து பற்றி பேசும் போதுபின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
கிப்லா வாசிகளில் உ‌ள்ள ஒவ்வொரு கெட்ட ந‌ல்ல மனிதர்களின்பின்னாலும் தொழ முடியும்  நாங்கள் கருதுகிறோம்.

தவ்ஹீதின் பெயரால் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும்



தவ்ஹீதின் பெயரில் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும் பற்றி நாம் பல முறை , பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம் . இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் பற்றி ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் 1998 முதல் கூறி வருகிறார். அந்த வகையில், நாம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிப்பது என்ன வென்றால், இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் 
மார்க்கத்தை வளர்க்கவோ , தவ்ஹீதை வளர்க்கவோ, சுன்னாவை அடையாளம் காட்டி வளர்க்கவோ வந்த இயக்கங்கள் இல்லை, மாற்றமாக அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கி , அல்குர் ஆனில் சந்தேகங்களை உருவாக்கி , ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை முரண்பாடுகளாக சித்தரித்து அவைகளை மறுத்து , நபி வழியையும் நபி மொழியையும் கேள்விக் குறியாக்கி, இந்த நபி வழியையும் , அல்குர் ஆணையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த அருமை சஹாபாக்களை குறை பேசி திரியும் கூட்டங்களாக தான் இன்று வரை இருந்துக் கொண்டிருக்கின்றன ? இவர்களின் வலையில் இன்று பல மக்கள் வீழ்ந்து அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். அருமை சஹாபாக்களின் வழிமுறைகளை யாரெல்லாம் தவிர்ந்துக் கொண்டார்களோ ,அந்த மக்கள் இவர்களது வலையில் சிக்கி சிரழிந்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறைகளை தவிர்ந்துக் கொண்டிருதோமேயானால், நாமும் இந்த மௌட்டீக கூட்டங்களின் வலையில் வீழ்ந்து இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பரக்கத்தால் நாம் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறையில் மார்க்கத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினால் புரிந்து விட்டோம், அதாவது, இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை, அல்குர் ஆன் பற்றிய இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை., இவர்களது வழி முறைகள் , இஸ்லாமிய வழி முறைகள் இல்லை, இவர்களது சட்டங்கள் , இஸ்லாமிய சட்டங்கள் இல்லை , இவர்களது ஆடைகள் இஸ்லாமிய ஆடைகள் இல்லை , இவர்களுடைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் இல்லை என்பதாக அறிந்து விட்டோம். மாறாக , எமது கொள்கை சஹாபாக்கள் கொண்டிருந்த கொள்கை, எங்கள் மார்க்கம், சஹாபாக்கள் பின்பற்றிய மார்க்கம், எங்கள் வழி முறை சஹாபாக்களின் வழி முறை, எங்கள் சட்டங்கள் சஹாபாக்கள் பின்பற்றிய சட்டங்கள், எங்கள் ஆடைகள் சஹாபாக்கள் அணிந்த ஆடைகள் , எங்கள் பழக்க வழக்கங்கள் அருமை சஹாபாக்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்கள். மொத்தத்தில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி அருமை சஹாபாக்கள் அணு அணு வாக பின்பற்றி செயல்பட்டார்களோ , அந்த கொள்கையும் மார்க்கமும் தான் எமது மார்க்கம். எமது ஆடையாகட்டும், எமது குடும்ப வாழ்க்கை ஆகட்டும், எமது சொந்த பிரச்சனைகள் ஆகட்டும் அனைத்தும் சஹாபாக்கள் பின்பற்றி செயல்பட்ட வழிமுறையில் அன்றி நாம் செயல் படுவதில்லை. சுருங்க சொன்னால் , நபி வழி அன்றி எமக்கு ஒருவழி இல்லை. எனவே, இந்த நேரான வழி முறையை தவிர்ந்துக் கொண்ட , வழி கெட்ட இந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களை வேரோடு கழற்றி விடுவது உண்மையான ஒவ்வொரு தவ்ஹீத் வாதியின் கடமையாகும்.
ஏனெனில், இவர்கள் வந்துவிட்டார்கள், அல்லாஹ் ஏழு வானத்தின் மேலிருந்து, அருமை சஹாபாக்களை புகழ்ந்து, நான் அவர்களை பொருந்திக் கொண்டேன், அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள் என்று கூறிய பின்பும் அந்த அருமை சஹாபாக்களை ஏளனம் செய்வதையும், குறை கூறுவதையும், திட்டி திரிவதையும் அழைப்பு பனியின் வழி முறையாக எடுத்து சொல்வதற்கு. வந்து விட்டார்கள், நபி மொழியையும் , நபி வழியையும் மறுப்பதற்கு வந்து விட்டார்கள். எனவே, இந்த கும்பலை சும்மா விட்டு விட முடியுமா ? உண்மையான தவ்ஹீத் வாதியின் முன்னாள் இவர்கள் மிஞ்சுவார்களா ? 
இதனால் தான் நாம் கூறுகிறோம் , இவர்கள் இந்த காலக்கட்டத்தின் " ஸனாதிகா ". ஸின்தீக் என்றால், மார்க்கத்திற்கு புறம்பாக பேசுபவர்கள், அதாவது, எந்த விதமான அளவுகோல்களும் இல்லாமல், மார்க்கத்தில் தன் இஷ்டப்படி , தனது புத்திக்கு தோன்றியதை எல்லாம் தர்க்கங்களை வாதங்களை அடிப்படியாக கொண்டு செயல் படுவதாகும். 
இதனை இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து இயக்கங்களிலும் காணலாம். அல்குர் ஆனை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், சுன்னாவை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், மறுப்பான். இவ்வாறு இவர்கள் தவ்ஹீதின் பெயரில் செய்யும் அக்கிரமங்களை சொல்வது என்றால், ஒரு உரையில், ஒரு சில பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாது. அந்தளவுக்கு இவர்களது அக்கிரமங்கள் மார்க்கத்தின் பெயரில் இருக்கிறது. 
தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை தனிப்பட்டதாக வணங்குவதாகும். அவனை தனிப்பட்டதாக வணங்க, அவன் தனிப்பட்டவன் , அவனுக்கு ஒப்பாக , நிகராக யாருமில்லை என்பதை தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் சரிவர அறிந்து இருக்க வேண்டும். அவனது செயல்பாடுகளை அவன் மட்டுமே செய்யக்கூடியவன் என்பதை அறிந்து இருக்க வேண்டும். அடிமைகளின் செயல் பாடுகளை அவனுக்கு ஒப்பாக்க முடியாது என்பதை அறிந்து இருக்க வேண்டும். மாற்றமாக ஒப்பாக்கி விட்டீர்கள் என்றால், அல்லாஹ்வை தனித்ததாக வணங்கியதாக அமையாது. அல்லாஹ்வை ஏகத்துவ படுத்தியதாக அமையாது. எனவே, அவன் தனிப்பட்டவன் என்பதை 
அறிய அவனது பெயர்களை பண்புகளை அவன் அல்குர் ஆனில் சுன்னாவில் வர்ணித்தவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் , அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய ஈமானில் சர்ச்சையாகி விடும். அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு இவர்கள் மாற்றுக் கருத்து கொடுக்க வாரார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வை விட அல்லாஹ்வை பற்றி அறிந்தவர்கள் என்று சொல்ல வருகிறார்கள் என்று தான் அர்த்தம் . 
ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான், சொல்வதில் அவன் ஆகவும் உண்மையானவன். வார்த்தைகளில் சிறப்பானது அவனுடைய வார்த்தை என்று. இதன் பிறகும் , அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு மாற்றுக் கருத்து கொடுக்க வருகிறார்கள் என்றால் , அல்லாஹ் சொல்வதில் மேலானவன், வார்த்தைகளில் அவனது வார்த்தை சிறப்பானது என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை என்று தான் அர்த்தம். அல்லாஹ் 
்தம். இவ்வாறு அல்லாஹ் அவனை பற்றி சொன்ன பெயர்களை பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் இல்லை, இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று இந்த கும்பல்கள் சொல்கிறார்கள் என்றால் , இது தவ்ஹீதா ? இது தான் அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையா ? இது இஸ்லாமிய கொள்கையா ? இதற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் ஆ ?  இப்படியான மௌட்டீக கூட்டம் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் , இது எனது ஆராய்ச்சி , இது எனது விளக்கம், எனது ஆராய்ச்சியின் அடிப்படையில் , எனது விளக்கத்தின் அடிப்படையில் இந்த பண்பு அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் என்று சொன்னால், இவர்கள் அறிந்ஜர்கள் ஆகிவிட்டார்கள், சொல்வதில் உண்மையாளர் ஆகிவிட்டார்கள் ஆனால் அல்லாஹ் மடத்தனமாக சொல
சிறப்பாக சொல்லவில்லை என்று தான் சொல்ல வருகிறார்கள். அல்லாஹ் அவனது பண்பை பற்றி சொன்ன பிறகும். இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது , அல்லாஹ் இவ்வாறு செய்ய முடியாது என்று சொல்ல வருகிறார்கள் என்றால் , அல்லாஹ்வுக்கு சிறப்பாக சொல்ல தெரியாமல் போய்விட்டது , இவர்கள் வந்து விட்டார்கள் சரியாகவும் சிறப்பாகவும் அல்லாஹ்வை பற்றி சொல்வதற்கு என்று தான் அர்
த்லிவிட்டான், பொய்யன் ஆகிவிட்டான் ( நவூதுபில்லாஹ் ) என்று தான் மறைமுகமாக சொல்ல வருகிறார்கள். இப்படியான விடயங்களை இவர்கள் சொல்ல , மக்களும் கேட்டு பின்னால் செல்கிறார்கள் என்று சொன்னால், மக்களின் ஈமான் என்னவாகிவிட்டது ?, புத்தி என்னவாகிவிட்டது ? , மக்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள் ? 
ய்மையானவன். தூதர்கள் மீது ஸலாம் உண்டாவதாக . அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் " என்று.
அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். இது தான் வரலாற்றில் வந்த அனைத்து பித் அத் வாதியின் அடிப்படைகள், அனைத்து வழிகேடர்களின் அடிப்படைகள். இத வழிகேடர்களுக்கு மறுப்பாக தான் அல்லாஹ் சூரத்துல் ஸாபாதில் கூறுகிறான், " இவர்கள் வர்ணிப்பதை விட்டும் உங்களுடைய மேலான இரட்சகன் மிகவும் பரிசுத்தமானவன்,
தூ
இந்த நபிமார்கள், அல்லாஹ்வை பற்றி அல்லாஹ் சொன்னதை தவிர வேறொன்றையும் சொல்லமாட்டார்கள். அல்லாஹ் இறக்கியதை தவிர வேறொன்றையும் சொல்ல மாட்டார்கள். எனவே தான், அந்த தூதர்மார்கள் மீது ஸலாம் உண்டாவதாக. இறக்கியதை இறங்கிய பிரகாரம் சொல்லி விடுவார்கள். அதில் தன் இஷ்டப்படி பேச மாட்டார்கள். எனவே, வஸலாமுன் அலல் முர்சலீன். 



இந்த அடிப்படியில் அல்லாஹ்வின் தூதரை நம்புகிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதர் சொன்னவைகள் வஹியாகும். அது அல்லாஹ் சுபஹானஹுதாலா குர் ஆனுக்கு விளக்கமாக அவனுடைய தூதருக்கு கொடுத்தது. இப்படி நம்பும் முஸ்லிம்கள் எப்படி , நபி மொழியை அல்குர் ஆனுக்கு முரணாக சுமக்க முடியும் ? இவ்வாறு, நபி மொழி அல்குர் ஆனுக்கு முரண் என்று இந்த கூட்டங்கள் சொல்கிறது என்றால், அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று சொல்வதாக தான் அர்த்தம். நபி , அல்லாஹ்வுக்கு முரணாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்ல வருகிறார்கள் என்று அர்த்தம். 



இவர் வஹியை தவிர பேச மாட்டார் என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா சொல்ல , நாம் இவருக்கு விளக்கத்தை கொடுத்தோம் என்று அல்லாஹ் சொல்ல , இவர்கள் வந்து, நபி அல்லாஹ்வுக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்கள். ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா ? இவர்கள் கூறுவது போல் நபி மொழி குர் ஆனுக்கு முரண் என்று சொல்வது , 
" திட்டமாக அல்லாஹ்வின் தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது. யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்தவராக , அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராக இருக்கிறாரோ அவருக்கு." என்று சொல்லப்பட்ட தூதர் அல்லாஹ்வுக்கு , அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று தான் அர்த்தம். அல்லாஹ் பாதுகாப்பானாக. இப்படி சொல்லும் மௌட்டீக கூட்டத்திற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் !!. இதற்க்கு பெயர் ஏகத்துவம் ?? எப்படி ?? இது எந்தக் கூட்டத்தின் ஏகத்துவம் ? யூத நசாராக்களின் ஏகத்துவமா ? இது இஸ்லாமிய ஏகத்துவமா ? இஸ்லாமிய ஏகத்துவம் இப்படியா ?.
ஆமாம், ஏகத்துவம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Monotheism என்று சொல்லி , கிறிஸ்தவர்கள் trinity யையும் அதாவது , பிதா , சுதன் , ஆவி என்று மூன்றையும் ஏகத்துவம் என்று ஆக்கி விட்டான். இவர்களும் தவ்ஹீத் வாதி என்கிறார்கள் என்றாலும் இவர்களிடம் , நீங்கள் தவ்ஹீத் வாதிகள் , பித் அத் செய்யும் இமாம் பின்னால் தொழ மாட்டீர்கள்!, கப்ரு ஸ்தான பள்ளிவாயல்களில் தொழ மாட்டீர்கள் ! இருப்பினும் நீங்கள் பாபரி மஸ்ஜித் எனும் கப்ரு ஸ்தான பள்ளிவாயலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, இந்த போலி தவ்ஹீத் வாதிகளின் பதில் என்ன தெரியுமா ? நாங்கள் கோயில்களுக்கும் , சர்ச்சுகளுக்கும் உரிமை என்ற விடயத்திற்காக குரல் கொடுப்போம் என்பதாகும். 
இப்படி ஒரு பதிலை உண்மையான தவ்ஹீத் வாதி சொல்வானா ? உரிமை என்ற ரீதியில் ஒரு முஸ்லிம் பச்சை ஷிர்க்கான கோயிலுக்கும் சர்ச்சுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பானா ? இந்த ஷிர்க்குகளும் இவர்களுக்கு ஏகத்துவ கொள்கை. உரிமை என்றால் , பள்ளிவாசல், கோயில் , சர்ச் மூன்றும் இவர்களுக்கு ஒன்று. அல்லாஹ்வின் உரிமை எங்கே ? அவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் , செய்ய வேண்டிய கடமையும் எங்கே ?
சுமந்து இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. இவர் இந்த பி. ஜெ. கூறுகிறார், அவர் தவ்ஹீதுக்கு தலைவராம். எந்தளவுக்கு என்றால், இலங்கை நாட்டு மக்கள் தொகை அளவுக்கு மக்கள் எங்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தும் ... என்று ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். க
சிலைகளை அழிக்க வந்த மார்க்கம் , தவ்ஹீதை சொல்லும் மார்க்கத்தின் அழைப்பு பணியை சொல்ல வந்த இவர்கள், சிலைகளுக்கு பாதுகாப்பாக ஆதரவு குரல் கொடுப்பேன் என்று தவ்ஹீத் பேசும் நாவால் சொல்கிறார்கள் என்றால் , இவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.  நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகளின் சிலை வைக்கும் தவ்ஹீதை இவர்க ள்யிலுக்கும் , சர்ச்சுக்கும் பாதுகாப்பாக அதரவு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று ஷிர்க்கை முழங்கும் தலைவர். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 
இவரது பாதை தமிழ் உலகத்தை ஷிர்க்கில் கொண்டு சேர்க்கும் பாதை. ஏனெனில் , எழுத்து மூலமாக வந்துள்ள அல்குர் ஆன் பாதுகாப்பாக வந்து சேரவில்லை என்று சொல்லும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை தெரியப்போகிறது. அல்லாஹ்வின் பெயர் பண்புகளை , தனது புத்திக்கு படவில்லை என்று மறுக்கும் , திரிக்கும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை அறிந்திருக்க போகிறது ? அல்லாஹ் அவனை பற்றி அல்குர் ஆனில் வர்ணித்தவைகளையும், நபி சல்லல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் வர்ணித்தவைகளையும் , படைப்பினங்களுடன் ஒப்பு ஆக்காமல் , மாற்று கருத்து கொடுக்காமல், மறுக்காமல், எப்படி என்று கேள்வி கேட்காமல் , அப்படியே வந்த மாதிரி கேட்டோம் , கீழ்படிந்தோம் என்று ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹீத். 
ஆனால், இவர்களோ அல்லாஹ்வின் பெயர் பண்புகளை மறுத்தும், திரித்தும், அவனுக்கு லாயக்கு இல்லை என்றும் சொல்லி தவ்ஹீத் என்ற அழைப்பு பனி செய்கின்றனர். இது தவ்ஹீத் அழைப்பு பனியா ? இவ்வாறு தவ்ஹீதை நாசாமாக்கி, அல்குர் ஆனை நாசமாக்கி செய்யப்படும் ஒரு அழைப்பு பணி தான் இவர்களின் அழைப்பு பணி. நவூதுபில்லாஹ்.


இந்த வழிகேடான கொள்கையை சுமந்த இவர்கள் , சலபி கொள்கைக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல. ஏனெனில், வரலாறில் இதே கொள்கை கொண்ட பல வழி கேடான கூட்டங்கள் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இவர்களை பார்த்து நாம் கூறுகிறோம் , இவர்களது வழி முறை முஃதஸிலா. இவர்களது கொள்கை அஷாயிரா என்று. ஏனெனில், முஃதஸிலா , அறிவிப்பை விடவும் தர்கத்திற்கும் வாதத்திற்கும் முன்னுரிமை கொடுப்பான். அஷாயிரா , அல்லாஹ்வின் பெயர் பண்புகளை படைப்புகளுடன் ஒப்பாக்கி, மறுத்து , மாற்று கருத்து கொடுத்து விடுவார்கள். இந்த போக்கு தான் இவர்களிடமும் காணப்படுகிறது. 
குறிப்பு: இந்த கட்டுரையின் முதல் peragraph கடைசியில் வந்ததின் காரணமாக கட்டுரையை சரியாக வாசிக்க முடியாமல் போனது. சிரமத்திற்கு மிகவும்  வருந்துகிறேன்....

இக்கட்டுரையின் ஆசிரியர் குறிப்பு : ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் ப‌ஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர். 
இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார். 

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் 
அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.

Friday, December 9, 2011

சுகமான பிரசவமும் வியாபாரம் ஆகிப்போன மருத்துவமும்

சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள்.


வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள்.


இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?


உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை?


டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம்.




இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கியமான விடயம் தான், எமது முஸ்லிம் பெண்களின் அவ்ரா பற்றியதாகும். ஏனெனில், இந்த கிளினிக் என்ற பெயரில், எமது பெண்களின் அவ்ராக்கள் மறைக்கப்பட வேண்டிய விடயம் பேணப்படுவதில்லை .



முஸ்லிம் அல்லாத பெண்கள் வரை , ஆண்கள் வரை, மஹ்ரம் இல்லாத அனைவராலும் முஸ்லிம் பெண்களின் அவ்ராக்கள் பேணப்படுவதில்லை. இன்னும், முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் பெண்கள் ஆஸ்பத்திரிகளில் சர்வ சாதாரணமாக பெண்களின் அவ்ராக்கள் பகிரங்கமாக வெளிக்காட்டப்படுகிறது.



பிள்ளை பெற சென்று விட்டாலே, ஆஸ்பத்திரிகளில் அரை குறை ஆடையுடன் பெண்கள் நடமாடுவதும், அங்கு அந்த பெண்களின் உறவினர்கள் நோயாளி பார்வை நேரம் என்ற நேரத்தில் வருபவர்கள் வந்து, ஆண்களும் பெண்களும் ஆக , இந்த அரை குறை ஆடையுடன் அலைந்து திரிவதையும் , பேசி கும்மாளம் அடிப்பதையும் கூட காணலாம். அத்தோடு, வலியின் மிகுதியால் , சுய நினைவு அற்ற நிலையில் பெண்கள் கண்டபடி தடுமாறுதை காணலாம்.



மேலும்

கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.


டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.


அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே.


தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன . தேவையில்லாத இரசாயன பொருட்கள்: கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது.


இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள்.


இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.


கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள் :-
கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள் குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம். பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள் மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள் பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள் சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன


குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.


விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம் விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்


விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு


விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்


விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை


விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை) விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்


விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை


விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி


தேவையற்ற கட்டுபாடுகள்:


கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள்.


கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா? திட்டமிட்ட சதியா?


பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.


சிசேரியன் மோசடிகள் அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.


இதில் என்ன ஆச்சரியம் ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியே இருக்கும் போது , உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?


அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது.


சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.


தேவையில்லாத மருத்துவ செயல்கள்:


விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது.


உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.


சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:


சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.


தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-


மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.


தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-


வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி.


தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.


சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது


சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?: -


கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.


கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.


ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.


இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:


கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை.பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும்.


அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.


வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:


கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும்.


குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.


பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .


ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் நலமாக அமைகின்றது.


அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், இன்ஷா அல்லாஹ்..
தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது.


எனவே நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம். ..இன்ஷா அல்லாஹ்..


டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med).


முகநூல் பக்கம் ஒன்றில் இருந்து பெறப்பட்டு , சுருக்கமானதாக எடிட் செய்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163