Showing posts with label இஸ்லாமிய இலக்கியம். Show all posts

Tuesday, April 6, 2010
Sunday, April 4, 2010
அதிரையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா.......
Posted by
muslimmalar
at
7:21 PM
அதிரையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக தலைவர் அயுப் தலைமை வகித்தார். ஹாஜி முஹம்மது இக்பால், ஹாஜி அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய தமிழ் இலக்கிய களாக பொது செயலாளர் சாயபு மறைகையர் வரவேற்றார். வேலூர் எம்.பி அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார்.
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், பெரியார் கருவூலம், தந்தை பெரியார் சிந்தனை களஞ்சியம், காதை மஸ்தான் ஆற்று படை, மும்மணிமாலை, ஆளுமை வளர்ச்சி பு மழை பொழியும், ராஜமடல், பத்ரு களம் கண்ட பார் போற்றும் நபிகள் உள்ளிட்ட நூல்கை வணிக வரித்துறை அமைச்சர் உபயதுல்லாஹ் அறிமுகம் செய்தார்.
இந்த விழாவில் எம்.எல்.எ. ரெங்கராஜன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப், காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் அப்துல் காதர், கலீல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Friday, April 2, 2010
14ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா
Posted by
muslimmalar
at
9:50 PM
அதிராம்பட்டினத்தில் 14ம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.
அதிராம்பட்டினம், லாவண்யா திருமண மண்டபத்தில், அதிரை வள்ளல் அண்ணாவியார் குலப் புலவர்கள் ஹாஜி காதிர் முகைதீன் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் தமிழ்மாமணி முனைவர் அ.அய்யூப் தலைமை தாங்குகிறார்.
இஸ்லாமியப் பாடல்களை இசையருவி, தமிழ்மாமணி சென்னை குமரி அபூபக்கர், கலைமாமணி ஹாஜி குல்முஹம்மது ஆகியோர் பாடுகின்றனர்.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தொடக்க உரை நிகழ்த்துகிறார்.அதன் பின்னர் பல்வேறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.
இரவு 7 மணிக்கு மகளிர் அரங்கம் நடைபெறுகிறது. இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக மகளிர் பிரிவுத் தலைவர் பேராசிரியர் நசீமா பானு தலைமை தாங்குகிறார். சென்னை முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நசீமா சிக்கந்தர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ஏப்ரல் 4ம் தேதி சனிக்கிழமையன்று பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் இடம் பெறுகின்றன. இதில், இக்கால இலக்கியங்கள் என்ற தலைப்பிலான அமர்வில், முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை நசீமா சிக்கந்தர், திருமறை – நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறார்.
சனிக்கிழமை மாலை நாலரை மணிக்கு ஊடகங்கள் சமுதாயத்தைச் சீராக்குகின்றனவா சீரழிக்கின்றனவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில், சீராக்குகின்றன என்ற தலைப்பில் பேராசிரியை நசீமா சிக்கந்தர், முனைவர் நத்தர்சா, பேராசிரியர் செய்யது முகம்மது கபீர் ஆகியோரும், சீரழிக்கின்றன என்ற தலைப்பில் முனைவர் அகமது மரைக்காயர், சவ்தா உம்மாள், ஹிதாயத்துல்லா ஆகியோரும் பேசுகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் விழா நிறைவுப் பேருரையாற்றுகிறார்

Subscribe to:
Posts (Atom)
அதிரையில் உடனடி போட்டோ