Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Thursday, April 14, 2011

அதிரையில் அமைதியான முறையில் வாக்குபதிவு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்குபதிவு நேற்று காலை 8 மணி முதல் 5 மணிவரை நடைபெற்றது. அதிரையை பொறுத்தவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது. நமதூர் வாக்குசாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வெயிலையும் பொறு படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நமதூரை பொறுத்தவரை 67.45% சதவீதம் வாக்குகள் பதிவானது.மாலை 5.30 மணியளவில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்ல பட்டது. வரும் மே 13 ஆம் தேதி வாக்கு என்னபடுகிறது.....

Wednesday, April 13, 2011

சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குபதிவு இன்று தொடங்கியது. சுமார் ஒரு மாத காலமாக தமிழக முழுவதும் தலைவர்கள்.சுறாவளி சுற்றுபயணம் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. நேற்று அமைதியாக மக்களிடம் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர்.இன்று காலை சரியாக 8 மணிமுதல் வாக்கு பதிவு தொடங்கியது. அதிரை மக்கள் தங்களது வாக்கு சாவடியில் நீண்ட வரிசையில் நிர்ந்று வாக்களித்து வருகின்றனர். இது வரை அமைதியாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிவரை வாக்கு பதிவு நடைபெறும். வாக்களிக்காதவர்கள் மாலை 5 மணிக்குள் தவறாது வாக்களியுங்கள்...     

Thursday, April 7, 2011

அதிரையில் கலை கட்டுகிறது தேர்தல்........

தமிழகத்தில் வருகிற 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அதிரையும் விதிவிலக்கு அல்ல. பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக  வேட்பாளர் ஏன்.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் நமதூர் அண்ணா சிலை அருகே பேசினார். காங்கிரஸ் வேட்பாளர் ஏன்.ஆர்.ரெங்கராஜன் நேற்று மாலை முதல் இரவு வரை அதிரை முழுவதும் வாக்கு சேகரித்தார்.அவர் செல்லும் வாகனம் முன் இசை முழங்க வாக்கு சேகரித்தது நமதூர் மக்களுக்கு கந்தூரி போல் காட்சியளித்தது.இன்று காலை முதல் ஒலிபெருக்கியில் விளம்பரம்  போட்டு கொண்டு ஊர்முழுவதும் வளம் வருகிறது சட்டை சின்னம். நமதூரில் வெட்டி பேச்சு இடமான செக்கடி மோட்டில் தேர்தல் வாக்குவாதம் அரங்கேறுகிறது. இதனால் அதிரையே கலை கட்டுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒரு வரேமே உள்ள நிலையில் அதிரை நகறேமே அதிர்கிறது. அதிரையிலிருந்து முஸ்லிம்மலர் ஹசன்.              

Sunday, April 3, 2011

அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறுமா?.......

அதிரை மக்கள் நீண்டகாலமாக சில கனவுகளை மனதிற்குள்ளே வைத்து வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த கனவுகள் நிறை வேற உங்கள் வாக்குகளை தான் பேரமாக வைக்க வேண்டும்.
ரூ.100 க்கும் 200 க்கும் ஆசைப்பட்டு உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள். அரசியல் கட்சிகள் உங்கள் ஓட்டுகளை வைத்து அவர்கள் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் குளிர் காய்கிறார்கள். ஒட்டு போட்ட நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். நீங்கள் போய் கேட்டால்.அதான் பணம் தந்தோமே என்பார்கள். விலை மதிப்பில்லாத உங்கள் ஓட்டுக்களை அற்ப காசுக்காக விலைபோக போகிறீர்களா?. ஒட்டு உங்கள் உரிமை அதை நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு பயன்படும் கருவியாக மாற்ற இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள்:
  1. தெருக்கோடியில் இருந்த ஊர்களெல்லாம் நகராட்சியை இருக்கும் போது  நகராட்சிக்குரிய அணைத்து தகுதிகள் இருக்கும் அதிரை மூன்றாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். 
  2. அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உறைதல் வேண்டும்.
  3. அதிரையில் ஆபத்து நேரத்தில் உதவ உருபடியாக ஒரு மருத்துவமனையும் இல்லை.அதிரையின் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை முழுநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்தல் வேண்டும்.
  4. அதிரையில் பெருகிவரும் வாகன விபத்துகளால் பதிக்க படுவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நமதூருக்கு தனி 108  ஆம்புலன்ஸ் செயல் படுத்துதல் வேண்டும்.
  5.  அதிரையில் தீவிபத்து ஏற்பட்டால் அணைக்க உதவும் தீயணைப்பு வண்டியுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைதல் வேண்டும்.
  6. அதிரை-கும்பகோணம் மார்க்கத்தில் இது வரை பேருந்து வசதி கிடையாது. இதனால் அதிரை மற்றும் மதுக்கூர் மக்களின் போக்குவரத்து தூரம் தேவையில்லாமல் அதிகமாகிறது. இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.
  7.   அதிரை நகரில் பேருந்து நிலைய இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கஷ்டபடுகிறார்கள். அவர்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க பட வேண்டும்.
  8. கடந்த இரண்டு வருடமாக நமதூரில் செயல்பட்ட வருவாய் அலுவலர் தற்போது இல்லை.இதனால் பொது மக்கள் வருமான சான்றிதழ் போன்ற பல்வேறு காரணங்களுக்காக  பட்டுகோட்டை செல்ல வேண்டிய நிலையுள்ளது. உடனே நமதூருக்கு வருவாய் அலுவலர் தேவை.
இந்த கோரிக்கைகளை  உங்கள் வீடு தேடி வரும் வேட்பாளரிடம் இதை செய்தல் உங்களுக்கு ஒட்டு போடுவோம் என கூறி நமதூரின் தலையெழுத்தை உங்கள் ஓட்டினால் மாற்றுங்கள்.
சிந்திக்கும் திறன் கொண்ட மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.....  

Wednesday, March 30, 2011

அதிரையில் தேர்தல் பிரச்சாரம்..!..!..!..!..



பட்டுகோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏன்.ஆர்.ரெங்கராஜனை ஆதரித்து நேற்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி தி.மு.க. மட்டும்தான்; ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான். நாங்கள் ஓட்டு கேட்கும் போது, சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறோம்.
5 வருடங்கள் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, ஏற்கனவே தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்த பெருமையுடன் தலைநிமிர்ந்து உங்களை சந்திக்கிறோம். ஆனால், எதிர்த்தரப்பில் உள்ளவர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் தரக்குறைவாக பேசி ஓட்டு கேட்கின்றனர்.
தமிழகத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால், ஒன்று கருணாநிதியை வாழ்த்தி, பாராட்டி பேசி நடத்த வேண்டும். அல்லது எதிராக பேசி நடத்த வேண்டும். ஆனால், அவரைத் தவிர்த்துவிட்டு அரசியல் நடத்த முடியாது.   தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர்தான் மற்றவர்கள் வெளியிட்டார்கள்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று பார்த்த பிறகுதான் அவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முதல்-அமைச்சர் கருணாநிதி செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்துதான் பல ஆட்சிகள் நடைபெறுகின்றன.
அனைவருக்கும் முன்னோடியாக உள்ள ஆட்சி, வழிகாட்டும் ஆட்சி தி.மு.க. ஆட்சி. இத்தகைய ஆட்சியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.   சிலர் தேர்தலில் தோற்றுவிட்டால், மலைவாசஸ்தலத்திற்கு சென்றுவிடுவார்கள். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி எந்த காலத்திலும் மக்களை கைவிட மாட்டார்.
13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் அவர் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறார். போராடி இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் தோற்றால், அடுத்த தேர்தலின் போது தான் மக்களை எட்டிப்பார்க்கிறார்.
சில அறிக்கைகள் விடுவார். அதைத்தவிர மக்களுக்காக எதைச் செய்தார்? எதற்காக போராடினார்? தேர்தல் வரும் போது தான் பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்.   கடந்த தேர்தலில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு அடுத்த தேர்தல் அறிக்கையை வெளியிடுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. ரூ. 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார். உழவர் சந்தைகளுக்கு புதுப்பொலிவு தந்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குவிண்டாலுக்கு ரூ.600 என்று இருந்த நெல்லுக்கான விலையை, ரூ.1,050 ஆக உயர்த்தினார். இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பல புதுமையான திட்டங்களை அறிவித்துள்ளார். உழவர்களைத் தேடி இடுபொருட்கள் வரும் என்று கூறி உள்ளார்.
பெண்கள் படிப்பதற்காக, திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்குகிறார். கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.   அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு 4 மாத காலமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால், வராது, ஆனால் வந்தால் மக்களின் மனதில் உள்ள ஒரே உணர்வு பயமாகத்தான் இருக்கும். முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சி, அனைவருக்கும் பெய்யும் மழையாக நன்மை பயக்கிறது. எனவே, தி.மு.க. கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, May 20, 2009

திமுக வெற்றி அதிரையில் அட்டகாசம்

தேர்தல் வெற்றி தொடர்பாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க.வினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.பட்டாசு வெடித்ததில் தகராறுஅதிரை பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன்கள் ராமராஜ் என்ற கனகராஜ் (வயது46), ஜெயசுந்தர் (43), சிவக்குமார் (வயது40). ராமராஜின் மகன் கமல்ராஜ் (வயது25). சிவக்குமார் அதிரை நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளராக உள்ளார். மற்றவர்கள் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அதிரையில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.தஞ்சை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிரையில் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சிவக்குமாரின் கடை அருகேயும் வெடி வெடித்தனர். இதனை சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தட்டிக்கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று காலை ராமராஜ், ஜெயசுந்தர், சிவக்குமார், கமல்ராஜ் ஆகிய 4 பேரும் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், கடையில் இருந்த 4 பேரையும் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரிமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜெயசுந்தரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைகள் அடைப்பு
ஜெயசுந்தர் இறந்த தகவலை அறிந்ததும் அதிரையில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பஸ்கள் ஓடவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் தி.மு.க.வை சேர்ந்த இராம குணசேகரன், சோமு, மாரிமுத்து, பாலாஜி மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் மீது கடந்த சில நாட்களுக்குமுன் மத்திய சென்னை தேர்தல் வண்முறையை கண்டித்து அதிரை மமகவினர் சுவரொட்டி ஒட்டியதை கிழித்தது தொடர்பாக அதிரைகாவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நன்றி :அதிரை xpress,அதிரை புதியவன்

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163