அதிரையில் காலை 07-00 மணி முதலே வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இன்று அதிகபட்சமாக 33 டிகிரி கொளுத்தியது. இதனால் மக்கள் சோர்வடைந்து காணபட்டார்கள். மாலை 3.30 மணியளவில் மேகம் மூட்டமாக காணப்பட்டது. பின் ஒரு 15 நிமிடம் மழை பெய்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 15 நிமிடம் பெய்த மழை 0.3mm ஆக பதிவானது. நடுத்தெரு முக்கத்தில் வெட்டி பேச்சு பேசுவது மழையால் தாமதமாகவே தொடங்கியது என்பது குறிபிடத்தக்கது.
0 comments:
Post a Comment