தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள். இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள் பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள். 10-ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன்பாடத்திட்டதின் கீழ் 4697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.
ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் கீழ் 1361 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணியும் நிறைவடைகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு இந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த ஆண்டை விட 5 நாட்கள் தாமதமாக முடிவு வெளியானது.
இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தள்ளிப்போகிறது. வருகிற 28-ந்தேதி தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள் ளது. அதற்கு முன்னதாக வெளியிட தேர்வுத் துறை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு 25-ந்தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகின்றன. டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் பிரிண்ட் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 22-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடியும் அதன் பிறகு மாவட்ட வாரியாக மதிப்பெண் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment