தேர்தல் வெற்றி தொடர்பாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க.வினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.பட்டாசு வெடித்ததில் தகராறுஅதிரை பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன்கள் ராமராஜ் என்ற கனகராஜ் (வயது46), ஜெயசுந்தர் (43), சிவக்குமார் (வயது40). ராமராஜின் மகன் கமல்ராஜ் (வயது25). சிவக்குமார் அதிரை நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளராக உள்ளார். மற்றவர்கள் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அதிரையில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.தஞ்சை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிரையில் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சிவக்குமாரின் கடை அருகேயும் வெடி வெடித்தனர். இதனை சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தட்டிக்கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று காலை ராமராஜ், ஜெயசுந்தர், சிவக்குமார், கமல்ராஜ் ஆகிய 4 பேரும் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், கடையில் இருந்த 4 பேரையும் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரிமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜெயசுந்தரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைகள் அடைப்பு
ஜெயசுந்தர் இறந்த தகவலை அறிந்ததும் அதிரையில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பஸ்கள் ஓடவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் தி.மு.க.வை சேர்ந்த இராம குணசேகரன், சோமு, மாரிமுத்து, பாலாஜி மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் மீது கடந்த சில நாட்களுக்குமுன் மத்திய சென்னை தேர்தல் வண்முறையை கண்டித்து அதிரை மமகவினர் சுவரொட்டி ஒட்டியதை கிழித்தது தொடர்பாக அதிரைகாவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நன்றி :அதிரை xpress,அதிரை புதியவன்
0 comments:
Post a Comment