அதிரையில் தற்பொழுது பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரிலிருந்து உண்டாகும் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் நமதூரில் பல நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்கள் மற்றும் வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்நிலையில் நமதூரை சேர்ந்த ஒரு பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எவ்வாறு இந்த காய்ச்சல் வந்திருக்க கூடும் கொசுக்களால் தானே. எனவே பேரூராட்சி தினமும் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமதூரில் நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் விரைவில் இது பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் வேண்டும். இதை அதிரை பேரூராட்சி செய்யுமா?...
பொறுத்து இருந்து பார்ப்போம்......
0 comments:
Post a Comment