(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.
எனவே அந்த நாட்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீது அதாவது { லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ்} அதிகமாகக் கூறுங்கள் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)
எனவே அந்த நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும் இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீசுகளையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த சிறப்பான காலத்தில் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா விடம் கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் அல்ல.
'(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) .
எனவே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.
0 comments:
Post a Comment