பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் தேர்தலுக்கு முன்னதாக தேர்வு முடிவை வெளியிட்டால் மாணவர்கள் மேல் படிப்பு தொடர்வதில் தாமதம் ஏற்படாது என்று கருதப்பட்டது.
ஆனால் தேர்தல் பணியில் ஈடுபடும் கல்வித்துறை ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு, தற்போது நடக்கிறது. தேர்தல் பணியில் நாளை முதல் ஈடுபடுவார்கள். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு எந்திரங்களை ஒப்படைக்கும் வரை ஆசிரியர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது.
தேர்தல் பணியில் இருக்கும்போது தேர்வு பணி மேற்கொள்வது இயலாது. அதனால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 16-ந்தேதிக்கு முன்பாக 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது. அல்லது ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு 18-ந்தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கேட்ட போது, பிளஸ்-2 தேர்வு வெளியிடுவது குறித்து இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிந்தவுடன் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி தேதி முடிவு செய்யப்படும் என்றார்.

0 comments:
Post a Comment