Tuesday, August 14, 2012

ஜெயிலில் இருக்கும் கணவர் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்

ரம்லா, ஆக.14- 

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷபன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயிலில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந்து) கடத்தினார். 

பின்னர், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் செயற்கை கருவூட்டல் (டெஸ்ட்டியூப்) செய்து கொண்டார். அதை தொடர்ந்து கர்ப்பம் ஆன அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இக்குழந்தை பாலஸ்தீனத்தில் நப்லஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிறந்தது. இதை அறிந்த அம்மர் அல்ஷபன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தனக்கு மகன் பிறந்து இருப்பதாக சந்தோஷப்பட்டார். 

பலமுறை உயிரணுவை கடத்தி செயற்கை கருவூட்டல் தோல்வி அடைந்ததாகவும் பின்னர் வெற்றிபெற்று தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் கூறினார். 

இதுகுறித்து, பாலஸ்தீன சிறை கைதிகள் நலத்துறை துணை மந்திரி ஷியாத்அபுகன் கூறும்போது, பாலஸ்தீன சிறை கைதிகளுடன் அவர்களது மனைவிகள் செக்ஸ் உறவு கொள்ள இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163