Saturday, April 21, 2012

ஒராண்டு அதிமுக ஆட்சியில் மக்களின் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது: விஜய்காந்த்

கோவை: கடந்த ஒராண்டு அதிமுக ஆட்சியில் மக்களின் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலம் முடிந்துவிட்டாலும், அந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள விஜய்காந்த், தேமுதிக வென்ற 29 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து சட்டசபைக்கு வர விஜய்காந்துக்கு தைரியம் இல்லை என்று அதிமுக பேசி வருகிறது. இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த்,

சட்டசபைக்கு தைரியம் இருந்தால் வாருங்கள் என்று என்னை கேட்கிறார்கள். நான் தைரியம் இல்லாமலா சட்டசபைக்கு சென்று கொண்டிருந்தேன். இப்போது தைரியத்தோடு தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறேன்.

6 மாதத்துக்கு ஒரு முறை சட்டசபைக்கு வர வேண்டும் என்று விதி முறை. சட்டசபையில் யார் எது பேசினாலும் பேசக்கூடாது என்று உட்கார வைத்து விடுகிறார்கள். அப்படி இருக்கையில் சட்டசபைக்கு எதற்காக போக வேண்டும்?.

ஆளும்கட்சிக்காரர்கள் திட்டங்களை சொல்வார்கள். நாங்கள் எதிர்க்கட்சிகள் தவறுகளை சொல்வோம். செய்யும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சொல்லும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.

ஆனால், சட்டசபையில் எங்களை பேச விடாததால் நாங்கள் தொகுதி தொகுதியாக வருகிறோம். இதை நாங்கள் வீம்புக்கு செய்யவில்லை. இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும். இதுவரை எந்த தலைவராவது இப்படி தொகுதி தொகுதியாக குறை கேட்க வந்தார்களா? நான் வந்துள்ளேன். இது போன்ற தொலைநோக்கு எல்லா தலைவர்களுக்கும் வரட்டும்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றும் நிகழ்ச்சி இன்னும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடக்கும். சட்டசபையில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதன் தீர்ப்பு வரட்டும். நாங்கள் ஜெயித்த தொகுதிகளுக்கு மட்டுமே குறை கேட்க செல்வோம்.

இலங்கை சென்றுள்ள நாடாளுமன்றக் குழுவில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மட்டுமே உள்ளன. இலங்கைத் தமிழர்கள் மீது யார் பற்றோடு இருக்கிறார்களோ அவர்களை அனுப்புவதும் இல்லை. அவர்கள் போவதும் இல்லை.

கடந்த ஒராண்டு அதிமுக ஆட்சியில் மக்களின் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இடைத்தேர்தலில் மாற்றி ஓட்டு போட்டால் நம் தொகுதிக்கு எந்த வளர்ச்சி திட்டமும் கொண்டு வரமாட்டார்கள் என்பதால் மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

புதுக்கோட்டைக்கு இடைத்தேர்தல் வருகிறது என்று தெரிந்ததும் தான் அந்த நகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வழங்குகிறார்கள் என்றார் விஜயகாந்த்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163