அதிரையை சின்ன சிங்கபூராக மாற்றுவேன் என்று தனது பதவி ஏற்பு மேடையில் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் வாக்குறிதி அளித்தார்கள். அதன்படி அதிரை நகரில் சுகாதார முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலமும் ப்ளெக்ஸ் மூலமும் விழிப்புணர்வு கொடுத்தார். இதன் முலம் அதிரையில் பிளாஸ்டிக் பைகளின் ஆதிக்கம் சற்று குறைந்துள்ளது. மேலும் சுகாதாரத்தை சீர்படுத்த பணிகள் செய்தாலும் அதிரை சுகதரத்தில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
அதிரை ஆஸ்பத்திரித் தெருவில் திமுகவை சேர்ந்த மெம்பர் செயத் வீட்டின் எதிரே உள்ள ஒரு கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடை பல நாட்களாக நிரம்பி தெருவில் ஓடிகொண்டிருக்கிறது. இதற்கும் மேம்பரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார் போலும். தன் வீடு எதிரே சுகாதார சீர்கேட்டை கண்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் போலும். இதனால் மக்கள் தெருக்களில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. பள்ளிக்கு தொழுக செல்லும் வழியில் வாகனங்கள் செல்லும் பொது அசுத்த நீர் ஆடைகளில் தெரிரிக்கிறது. இதன் மூலம் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இன்று காலை அதே தெருவில் உள்ள மற்றொரு சாக்கடையும் நிரம்பி ஓடுகிறது. இன்னும் சிறுது நேரத்தில் இரண்டு நதிகளும்(சாக்கடைகளும்) சேர்ந்து தெருவிற்கு நறுமணமும் பல நோய்களும் வழங்க உள்ளது.
இச்சீர்கேட்டை என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி. தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடியாததற்கு அவர்கள் கட்சி உறுப்பினர்களே தடையாய் உள்ளனரே. அதிரை பேரூராட்சி என்ன செய்ய போகிறது. அதிரைக்கு என்ன பெயர் வாங்கி தர போகிறது. சின்ன சிங்கபூரா? அல்லது சின்னாபின்னமான சிங்க பூரா?.......
தேங்கி நிற்கும் சாக்கடை நீர்
நிரம்பி வழியும் சாக்கடை
புதுப்பள்ளிக்கு செல்லும் வழி
நிரம்பி வழியும் மற்றொரு சாக்கடை
படங்கள் : ஹசன் (முஸ்லிம்மலர்)
1 comments:
Adirayil ulla mukyamana therukkalil ithuvum onru. Ward membarin kavana kuraivae karanam. Clean soon
Post a Comment