கடந்த 6 ஆம் தேதி அன்று அல் அமீன் பள்ளிவாசலில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவிற்கு வாக்களிக்க கூடாது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி வாசல் கட்ட தடையாகவும் எதிர்ப்பாகவும் இருந்த திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். என கோசம்போட்டனர். அவர்கள் வீடுவீடாக சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார்கள்.
இந்தஅமைதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாப் ஹாஜா அவர்கள் கூறியதாவது:
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தால் நிச்சயம் புறக்கணிப்போம். அல் அமீன் பள்ளி பிரச்சனைதிமுக மூலகாரணமாக உள்ளது எனவே நாங்கள் திமுகவை நிச்சயம் எதிர்போம் என்று கூறினார். எனவே நாம் அனைவரும் திமுகவை புறக்கணிப்போம்.
இரையச்சம் கொண்டோர்களே!அல்லாஹ்வின் பள்ளிவாசலுக்கு எதிராக செயல்படும் திமுகவினரை எல்லா தேர்தலிலும் தோல்வி அடைய செய்யுங்கள் இஸ்லாமியர்களின் சொத்துகளும் பள்ளிவாசல்களும் பாதுகாக்கபட வேண்டுமானால் நமது இஸ்லாமியர்களுக்கு எதிரான நமதூர் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டாம் நாம் எல்லாம் ஒன்று படுவோம் அரசியல் ஆதாயத்திற்க்காக நம்மை பல பிரிவுகலாக்கும் கெட்ட அரசியல்வாதிகளை இனம்கண்டு எதிர்போம் ! இன்ஷா அல்லாஹ் நம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலை நாம் அழகுபட கட்டுவோம்.
உணர்வுள்ள சமுதாயமே சிந்திப்பீர் ! ஒரே ஒரு முறையாவது மாற்றி அமைபீர்.
மக்கள் தொலைக்காட்சி அல்லது ஜெயா பிளஸ் தொலைக்காட்சியை பார்க்கவும்
0 comments:
Post a Comment