Wednesday, December 7, 2011

பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு அது பற்றிய எச்சரிக்கையும் உபதேசமும்...

ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் ஸ்தாபகர் அபுல் அஃலா மவ்தூதி குறித்தும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறே முஹம்மத் அப்துஹு போன்ற வர்களும் பல அறிவிப்புக்களை மறுத்துள்ளனர். முஃதஸிலாக்கள் போன்றோர் இந்த வகையில் பல்வேறு ஹதீஸ்களை மறுத்து வந்தனர்.

இவர் வழிகேடெனும் விஷத்தை சற்று அதிகமாகவே அருந்தி விட்டார். அந்த வழிகேட்டையே அவருடைய ரத்த நரம்புகளில் ஓட விட்டுவிட்டார். சஊதி அரேபியாவுக்கான எனது பயணமொன்றில் அங்கு நான் சந்தித்த அறிஞர்களிடம் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய வழிகேடான போக்குகள் பற்றிக் கூறிய வேளை அந்த அறிஞர்கள் என்னை நோக்கி கூறினார்கள்: நீங்கள் இந்த மனிதனின் நடவடிக்கைகளை வழிகேடென்று சொல்வது இஸ்லாத்திற்குச் செய்கின்ற அநியாயமாகும்.

ஏனென்றால் P. ஜெய்னுல் ஆபிதீன் என்ற இந்த மனிதனின் போக்கைக் கவனிக்கையில் அவரிடம் குப்ர் இருப்பது தெரிகிறது. அவரது செயல்களை வழிகேடென்று சொல்வதை விட குப்ர் என்று சொலவதுதான் சரியானது என்று அந்த அறிஞர்கள் என்னிடம் கூறினார்கள். இருப்பினும் என்னைப் பொருத்தவரை இந்த மனிதனுடைய விடயத்தை கல்வியில் சிறந்த உலமாக்களிடம் நான் விட்டுவிட்டேன். அவர்களே இவரைப் பற்றி இந்த உம்மத்திற்குத் தீர்ப்பு வழங்கட்டும். இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய உலகம் அதனை அறிந்து கொள்ளும்.

அறபு உலமாக்கள் P. ஜெய்னுல் ஆபிதீன் விடயத்தில் ஆச்சரியம் கொள்ளும் அம்சம் என்னவென்றால் அறபி தெரியாத இந்த மனிதர் எப்படி இந்த முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்ட முன்வந்தார். இந்த சமூகம் எப்படி இவரை தங்களுக்கு வழிகாட்டும் தலைவராக எடுத்தது? என்று பல அறபி உலமாக்கள் வியப்புடன் கேள்வி கேட்கின்றனர்.

அறபி மொழி சரியாக பேச தெரியாதது மட்டுமின்றி அறபி உலமாக்களோடு எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத ஒரு மனிதரிடமிருந்து பெரும் சமூகமொன்று எப்படி இஸ்லாமிக் கல்வியைப் பெற்றுக்கொள்கிறது என்ற உலமாக்களின் கேள்விக்கு நான் பதிலாகக் கூறியது என்னவென்றால்…

எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. மேலும் எமது சமூகத்தில் அறபி மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை.

எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம். இவ்வாறு நான் அந்த அறிஞர்களிடம் எமது சமூகத்தைப் பற்றி விளக்கினேன்.

சமூகத்திலுள்ள மக்களின் இந்த வரைவிலக்கணம் எமது இமாம்கள் (அஇம்மதுல் முஸ்லிமீன்) காட்டித் தந்த வரைவிலக்கணமல்ல. எனவே பொது மக்களின் இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஆலிமானவர்களில் ஒருவராகத்தான் P. ஜெய்னுல்; ஆபிதீன் என்பவரும் இருக்கிறார்.

இவர் கூட்டத்தை உருவாக்கினார். பெயரை வளர்த்துக் கொண்டார். எனவே உம்மத்துக்கு வழிகாட்டும் ஆலிமாக மாறி விட்டார். இதனால் எந்த உலமாக்கள் இவரை ஒரு ஆலிமென்று சமூகத்துக்கு அடையாளம் காட்டினார்களென்பதோ இவர் எந்த உலமாக்களிடம் அமர்ந்து கல்வியைப் பெற்றுக் கொண்டாரென்பதோ மக்களுக்கு தேவையற்றதொரு விடயமாக மாறி விட்டது. அதன் அவசியத்தை எவரும் பொருட்படுத்தவில்லை.

பி. ஜெ. யை பற்றி பி. ஜெ. யே அறிமுகம் செய்கிறார்
தனது கல்வி தகைமை பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு பாருங்கள். நான் சரியான கல்வியை முறையாக கற்கவில்லை என அவரே முழங்குகிறார். இன்றுவரை தான் சுயமாக ஆராய்ந்து தனது தர்க்கத்தையும் குதர்க்கத்தையும் மார்க்க பிரச்சாரத்தில் செய்து வருகிறேன் என்று அவர் அறியாமலேயே ஒப்பு கொண்டு விட்டார்.

நானும் { பி. ஜெ. } என் சகோதரர் பீ ஷைக் அலாவுதீன் என்ற பி.எஸ்.அலாவுதீனும் மதீனாவில் படிக்கவில்லை. உம்ராபாத்திலும் படிக்கவில்லை. மத்ஹப், ஷிர்க், தரீக்கா மற்றும் எல்லா பித்அத்களையும் ஆதரிக்கும் கல்விக் கூடங்களில் தான் பயின்றோம். அது தான் மார்க்கம் என்று போதிக்கப்பட்டோம். தர்கா வழிபாடு தவறு என்று எங்களுக்குத் தோன்றியது. இது குறித்து நாங்களே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி ஷிர்க்கை மட்டும் எதிர்த்தோம். மத்ஹப் தரீக்கா இன்ன பிற பித்அத்களை அந்தக் கால காட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை. அவற்றைத் தவறு என்று கூட அறியவில்லை. தர்காவை எதிர்க்கின்ற அனைவரும் தவ்ஹீத் வாதிகள் என்று கருதியதால் அது போன்ற எல்லா இயக்கங்களிலும் தொடர்பு வைத்தோம். இதனால் தான் 280 நாட்கள் நான் தப்லீக் ஜமாஅத்தில் இந்தியா முழுதும் சென்றேன். அதுபோல் என் சகோதரர் ஜமாஅதே இஸ்லாமி சிம் போன்ற இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். அந்தக் கால கட்டத்தில் நாங்கள் தப்லீகையும் விரும்பினோம். ஜமாஅதே இஸ்லாமியையும் விரும்பினோம். தர்கா வழிபாட்டை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால். தர்கா வழிபாட்டை சையித் குதுபும் எதிர்த்ததால் அந்த நூலிலும் தர்கா வழிபாட்டுக்கு ஆதரவான கருத்து இல்லாததால் நாங்கள் சரி என்று நம்பிய போது அது மொழி பெயர்க்கப்பட்டது.
இதற்கு மேலும் இவரைப் பற்றி குறிப்பிடத் தேவையில்லை. இவரை பார்த்து ஒருவர் அறிஞ்சர் என்று சொன்னால் சொல்கிறவர்களை பற்றி நீங்களே தெரிந்து கொளுங்கள்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163